• Latest News

    September 21, 2014

    கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லையாம்: தேர்தல் முடிவுகள் குறித்து வீரவன்ச பெருமிதம்

    ஊவா மாகாண சபைத் தேர்தல் சம்பந்தமாக எதிர்க்கட்சிகள் கட்டியெழுப்பிய மாயைகள் தேர்தல் முடிவுகளுடன் உடைதெறியப்பட்டுள்ளதாக அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.

    ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னோக்கிய பயணத்தை நிறுத்த முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

    ஊவா தேர்தல் முடிவுகளை பார்க்கும் போது எதிர்க்கட்சிகள் கடந்த காலங்களில் கட்டியெழுப்பி வந்த மாயைகள் எல்லாம் உடைத்தெறியப்பட்டுள்ளன.

    தீர்மானிக்கும் சக்தி நாமே என ஜே.வி.பி கூறியதுடன் ஜே.வி.பியுடன் இணைந்து கூட்டணி ஆட்சியை ஏற்படுத்த போவதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்தது.

    இப்படியான பல மயக்கத்தை ஏற்படுத்தும் மாயைகளை எதிர்க்கட்சிகள் கட்டியெழுப்பின.

    இவ்வாறான பல நடவடிக்கைகளில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டாலும் அவர்களால் ஆளும் கட்சியை தோற்கடிக்க முடியவில்லை.

    ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஜனாதிபதி தலைமையிலான இந்த அரசாங்கத்துடன் நாட்டுக்கு மக்கள் மேற்கொள்ள  இருக்கும் சேவைகளின் பயணம் முற்று பெறாது.

    மேலும் வெற்றிகளை பெற்று முன்னோக்கி செல்லும்.

    அதற்கான நற்செய்தியாகவே ஊவா தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன எனவும் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.

    அமைச்சர் விமல் வீரவன்ஸவின் தேசிய சுதந்திர முன்னணி ஊவா மாகாண சபைத் தேர்தலில் பதுளை மாவட்டத்தில் தனித்து போட்டியிட்டதுடன் ஒரு ஆசனத்தையும் கைப்பற்றவில்லை.அத்துடன் குறைவாக வாக்குகளையே பெற்றது.

    மொனராகலை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிட்டது. எனினும் அந்த கட்சியின் உறுப்பினர்கள் எவரும் தெரிவாகவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லையாம்: தேர்தல் முடிவுகள் குறித்து வீரவன்ச பெருமிதம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top