• Latest News

    September 04, 2014

    14 வயது இளம் தேரரை 1 வருடத்திற்கும் மேலாக பாலியல் வன்முறைக்குட்படுத்தும் பல்கலைக்கழக தேரர்!

    அசிரத்தையாக இருக்கின்றது அத்துருகிரிய பொலிஸ் என மக்கள் விசனம்!

    14 வயது இளம் தேரர் ஒருவரை ஒரு வருடத்திற்கும் மேலாக கடுமையான முறையில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் பல்கலைக் கழக விரிவுரையாளர் ஒருவரான அத்துருகிரிய போரே பிரதேசத்தைச் சேர்ந்த விகாரையொன்றின் தேரர் ஒருவர் இனங்காணப்பட்டுள்ள போதும், அவரைக் அத்துருகிரிய பொலிஸ் கைதுசெய்யாது நழுவுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


    குறித்த 14 வயது இளம் துறவி, தனது மனப் பாதிப்புக்கு மருந்து எடுப்பதற்காக சென்ற 29 ஆம் திகதி முல்லேரியா மனநோய் மருத்துவமனைக்குச் சென்றுள்ளதுடன், அங்குள்ள வைத்தியர்களிடம் தான் தங்கியிருக்கின்ற விகாரையிலுள்ள குறித்த பல்கலைக்கழக விரிவுரையாளரான தேரர் தன்னை ஓராண்டுக்கும் மேலாக பல்வேறு முறைகளில் பாலியல் தொந்தரவுகளுக்கு உட்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

    (கேஎப்)
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: 14 வயது இளம் தேரரை 1 வருடத்திற்கும் மேலாக பாலியல் வன்முறைக்குட்படுத்தும் பல்கலைக்கழக தேரர்! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top