இலங்கையின் கிரிக்கெட் அணியின்
முன்னாள் தலைவர் திலகரட்ன டில்ஷான் இஸ்லாத்தை விட்டு பெளத்த மதத்துக்கு
மாறியதாக குற்றம் சாட்டியுள்ளார் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆரம்ப
துடுப்பாட்ட வீரர் அஹ்மட் செஹாட். திலகரட்ன டில்ஷான் இஸ்லாமிய வாழ்வியலை
அறியாத குடும்பம் ஒன்றில் பிறந்து பெயரளவில் முஸ்லிம் என அடையாளம்
காணப்பட்டிருந்த நிலையில் (முஸ்லிம் என்று தெரிவிக்கப்படும் தந்தைக்கும்
பெளத்த மதத்தை சேர்ந்த தாய்க்கும் பிறந்தாக தெரிவிக்கப்படும்) துவான்
மொஹமத் டிலசான் தனது 16 ஆவது வயதில் இலங்கையின் கிரிக்கெட் அணியில்
நுழையும் நோக்கில் மிச்சமாக இருந்த பெயரையும் மாற்றிக்கொண்டதாக
தெரிவிக்கப்படுகிறது .
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆரம்ப
துடுப்பாட்ட வீரர் அஹ்மட் செஹாட் ‘இஸ்லாத்தை ஏற்றுகொள் நேரடியாக சொற்கம்
செல்லாம்’ தெரிவித்த கருத்துக்கள் இஸ்லாமிய மதத்துக்கு ஈர்க்கும் வகையில்
செயற்பட்டதாக கூறி பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் அஹ்மட்
செஹாட் மீது விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தானிய கிரிக்கெட் சபை இந்த விசாரணையை
நடத்தியுள்ளது. எனினும் தாம் தனிப்பட்ட ரீதியில் இந்த கருத்தை டில்ஷானிடம்
கூறியதாக செஹாட் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் டில்ஷானை
பாதித்திருக்குமானால் ஏன் அவர் உத்தியோகபூர்வமாக முறையிடவில்லை என்றும்
செஹாட் கேள்வி எழுப்பியுள்ளார்.
0 comments:
Post a Comment