ஊவா மாகாண சபைத் தேர்தலில் பதுளை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஹரின் பெர்னாண்டோ ஒரு லட்சத்து 73 ஆயிரம் விருப்பு வாக்குகளை பெற்று மாவட்டத்தில் முதலிடத்தை பிடித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிட்ட அனுர வித்தானகமகே 59 ஆயிரத்து 316 விருப்பு வாக்குகளை பெற்று அந்த கட்சியில் முதலிடத்தை பிடித்துள்ளார்.
ஜே.வி.பியின் சார்பில் போட்டியிட்ட சமந்த வித்தியாரத்ன 14 ஆயிரத்து 161 விருப்பு வாக்குகளை பெற்று ஜே.வி.பியில் முதலிடத்தை பிடித்துள்ளார்.ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிட்ட அனுர வித்தானகமகே 59 ஆயிரத்து 316 விருப்பு வாக்குகளை பெற்று அந்த கட்சியில் முதலிடத்தை பிடித்துள்ளார்.
பதுளை மாவட்டத்தின் ஐக்கிய தேசியக் கட்சியின் விருப்பு வாக்கு பட்டியல்.
ஹரின் பெர்னாண்டோ - 173, 993
வேலாயும் ருத்ரதீபன் 30, 457
ஜயந்த கன்னங்கர 28, 290
உபாலி சமரவீர 28,229
ரவி சமரவீர 25, 580
செனரத் ஜயசூரிய 24, 216
உபாலி சேனாரத்ன 22,273
ஆர்.எம். ரத்நாயக்க 20,249
அதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் பதுளையில் போட்டியிட்டவர்களின் விருப்பு வாக்கு விபரங்கள்.
அனுர வித்தானகமகே 59,316
சாமர சம்பத் தசநாயக்க 34,337
செந்தில் தொண்டமான் 31,858
சுதர்ஷன தெனிப்பிட்டி 28, 187
ஏ.எம். புத்தசாச 25,193
வடிவேல் சுரேஷ் 21,967
ஹேமாந்த ரத்நாயக்க 20, 536
எம்.பி. வீரசேன 20, 282
ஏ. கணேசமூர்த்தி 19,262
ஜே.வி.பியின் பதுளை மாவட்ட முதன்மை வேட்பாளராக போட்டியிட்ட சமந்த வித்தியாரத்ன 14 ஆயிரத்து 161 வாக்குகளை பெற்றுள்ளார்.
இம்முறை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் 4 தமிழர்கள் ஊவா மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment