• Latest News

    September 29, 2014

    புலமை பரிசு பரீட்சையில் சித்தியடைந்த மாணவிக்கு மக்கள் வங்கி கௌரவிப்பு

    றுஹைன அஹமட்:
    நிந்தவூர் கமு/அல்-மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலை மாணவி அப்துல் காதர் பாத்திமா சுமையா இல்மி எனும் மாணவி; 2014ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் ஐந்து புலமைப் பரிசு பரீட்சையில் அம்பாரை மாவட்டத்தில் 193 புள்ளிகளை எடுத்து முதற் தரத்தில் சித்தி பெற்று சாதனை படைத்துள்ளார்.
    இவரின் இச்சாதனையை பாராட்டும் முகமாக இன்று மக்கள் வங்கியின் நிந்தவூர் கிளை ரூபா 25 ஆயிரம் பெறுமதியான காசோலையையும், பரிசுப் பொருட்களையும் வழங்கியது. நிந்தவூர் மக்கள் வங்கியின் முகாமையாளர் ஏ.எம்.பாறூக் இவற்றினை வழங்கினார்.

    இதே வேளை, இப்பரீட்சையில் 178 புள்ளிகளைப் பெற்ற நிந்தவூர் கமுஃஅல்-மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலை மாணவி செல்வி. முஹம்மட் ராபியு பாத்திமா பாத்திமா சியாசத் மிப்ரா என்பவருக்கும் நிந்தவூர் மக்கள் வங்கி பரிசுகளை வழங்கியது.


    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: புலமை பரிசு பரீட்சையில் சித்தியடைந்த மாணவிக்கு மக்கள் வங்கி கௌரவிப்பு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top