• Latest News

    September 30, 2014

    எகிப்தின் சர்வாதிகாரி ஸீசிக்கு அருகே ஆசனமா எனக்கு விருந்தே வேண்டாம் : துருக்கி ஜனாதிபதி அர்துகான்

    எகிப்தின் சர்வாதிகாரி அப்துல் பத்தாஹ் அல் ஸீசிக்கு அருகே ஆசனம்  ஒதுக்கிய ஐக்கிய நாடுகள் அவையின் நடவடிக்கையை விமர்சித்த துருக்கி ஜனாதிபதி  அர்துகான் விருந்தில் பங்கேற்கமாட்டேன் என அறிவித்துள்ளார். ஐ.நா பொதுக்கூட்டம் நியூயார்க்கில் நடைபெறுவதையொட்டி ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூன் உலக தலைவர்களுக்கு விருந்து ஏற்பாடு செய்துள்ளார்  .

    இதில் எகிப்தின் இராணுவ சர்வாதிகாரி ஸீசிக்கு அருகே அர்துகானின் சீட் ஒதுக்கப்பட்டிருந்தது. இது முதலில் ஜனாதிபதி அர்துகானுக்கு தெரிவிக்கப்படவில்லை.இவர்களுடன் அமெரிக்க ஜனாதிபதி  பாரக் ஒபாமா, தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் சுமா, பான் கீ மூன் ஆகியோரின் சீட்டும் ஒதுக்கப்பட்டிருந்தது.

    எகிப்தில் இராணுவ சதிப் புரட்சிக்கு அங்கீகாரம் அளிக்க ஐ.நா முயற்சிப்பதாக ஐ.நாவில் தனது உரையில்அர்துகான் குற்றம் சாட்டினார்.’எகிப்தில் சதிப்புரட்சியின் மூலம் ஆட்சியை பிடித்தவர்களின் பக்கம் ஐ.நா நிற்கிறதா? மக்களின் பக்கம் நிற்கிறதா? என்று துருக்கி ஜனாதிபதி அர்துகான் கேள்வி எழுப்பியுள்ளார் .ஐக்கிய நாடுகள் அவையும், ஜனநாயக நாடுகளும் எகிப்தில் நடந்த நிகழ்வுகளின் போது தலையிடாமல் பார்வையாளர்களாக இருந்தன.அங்கே அரசை கவிழ்த்த இராணுவம் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை படுகொலைச் செய்தது.இந்த கொடூரங்களுக்கு தலைமை வகித்த நபருக்கு சட்ட அந்தஸ்து வழங்க முயற்சி நடக்கிறது என்று அர்துகான் என கடுமையாக சாடியுள்ளார் .
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: எகிப்தின் சர்வாதிகாரி ஸீசிக்கு அருகே ஆசனமா எனக்கு விருந்தே வேண்டாம் : துருக்கி ஜனாதிபதி அர்துகான் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top