இன்று செல்போன் தனிமனிதனின் அங்கமாகவே மாறிவிட்டது. பலரும் செல்போன்
இல்லாத ஒரு உலகினை கற்பனை செய்து பார்க்க இயலாத நிலைக்கு
தள்ளப்பட்டுவிட்டனர். அமெரிக்காவில் நடந்த ஒரு ஆய்வில் ஆண்களை விடப்
பெண்களே செல்போனில் அதிக நேரம் செலவழிப்பதாக தெரியவந்துள்ளது. இந்த
ஆய்வில், பெண்கள் குறுஞ்செய்தி அனுப்புவது மின்னஞ்சல்கள் மூலம் நண்பர்களைத்
தொடர்பு கொள்வது போன்றவற்றிற்காக அதிகம் பயன்படுத்துகின்றனர். அதேசமயம்
ஆண்கள், பொழுதுபோக்கவும் சமூக வலைதளங்களை அணுகுவதற்கும் அதிகம் பயன்படுத்த
விரும்புகின்றனர் என்ற தகவல் தெரியவந்துள்ளது.
ஒரு
ஆன்லைன் சர்வே மூலம் சுமார் 164 மாணவர்களிலிருந்து 24 மாணவர்களைத்
தேர்ந்தெடுத்து, அவர்களது செல்போன் பயன்பாட்டினை ஆய்வு செய்தனர். இதில் 11
பேர்களின் செயல்பாடுகள் அவர்களது பாலினம் அடிப்படையில் மாறுபட்டதாக
இருந்தது. மேலும் இந்த ஆய்வில் பங்கேற்ற மாணவர்கள் பெரும்பாலும் சமூக
வலைதளங்களான பின்ட்ரஸ்ட், இன்ஸ்டாகிராம் போன்றவற்றை அதிகம்
பயன்படுத்துவதாகவும், ஏனையோர் இண்டெர்நெட் மற்றும் கேம் விளையாடுவதில்
பொழுது போக்குவதாகவும் தெரியவந்துள்ளது.ஒரு நாளில் இவர்களது செல்போன்
செயல்பாடுகளின் நேர அளவின் பட்டியலும் இதில் வெளியிடப்பட்டுள்ளது.
குறுஞ்செய்தி அனுப்புதல் (94.6 நிமிடங்கள்), ஈ-மெயில் அனுப்புதல் (48.5
நிமிடங்கள்), ஃபேஸ்புக் (38.6 நிமிடங்கள்), இண்டெர்நெட் (34.4 நிமிடங்கள்)
மற்றும் பாடல்கள் கேட்டல் (26.9 நிமிடங்கள்).
ஆண்களும் பெண்களைப் போல
அதே அளவிலான ஈ-மெயில்களை அனுப்புவதாகவும், ஆனால் ஆண்கள் அதற்கு குறுகிய
நேரமே எடுத்துக் கொள்வதாகவும் ஒரு ஆய்வாளர் கூறுகிறார். இதிலிருந்து,
ஆண்கள் பெண்களை விடதகவல்களை சுருக்கமாகவும் திறம்படவும் அனுப்புகின்றனர்
என்று அறியலாம்.
இந்த ஆய்வில், பெண்கள் பெரும்பாலும் குறுஞ்செய்தி அனுப்புவது
மின்னஞ்சல்கள் மூலம் நண்பர்களைத் தொடர்பு கொள்வது போன்றவற்றிலும், ஆண்கள்
பொழுதுபோக்கவும் சமூக வலைதளங்களை அணுகவும் பயன்படுத்துவது தெரிய
வந்துள்ளது. ஆண்கள் பெரும்பான்மை நேரத்தை பயனுள்ள விஷயங்களிலும் மற்றும்
பொழுதுபோக்கவும் மட்டுமே பயன்படுத்துகின்றனர்.
ஆண்களும் சமூக வலைதளங்களான ஃபேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம்
போன்றவற்றில் நேரம் செலவிடுகின்றனர். அதிலும் டுவிட்டர் வலைதளத்தினை
விளையாட்டு விவரங்கள், செய்திகள் ஆகியவற்றிற்காக அணுகுகின்றனர்.
இதனைப் பற்றி ஆய்வாளர் ராபர்ட் கூறுகையில் ஆண்களை விடப் பெண்கள் அதிக
நேரம் சமூக வலைதளங்களில் மூழ்குவது, ஆழமான உரையாடலில் ஈடுபடுவது போன்றவை
அவர்களை செல்போனில் அதிக நேரம் மூழ்கடிக்கச் செய்து அவர்களை அதற்கு
அடிமையாக்கிவிடுகிறது என்கிறார்.
0 comments:
Post a Comment