
ஊவா
மாகாண சபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கணிசனமாக
வாக்குகளை இழக்கும் என மீன்பிடி மற்றும் நீரியல்வள அமைச்சர் ராஜித சேனாரத்ன
தெரிவித்துள்ளார் என தகவல்கள்
தெரிவிகின்றன.
அமைச்சர் கூறியுள்ளதாக தெரிவிக்கும்
தகவல்களில் ,அரசாங்க பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை
குறிப்பிட்டுள்ளார் என்றும் மொனராகலையில் 58 முதல் 60 வீத வாக்குகளும்
பதுளையில் 52 முதல் 53 வீத வாக்குகளும் கிடைக்கும் எனவும் அமைச்சர்
கூறியுள்ளார்.
2009 ஆம் ஆண்டு நடைபெற்ற ஊவா மாகாண சபைத்
தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 72.39 வீத வாக்குகளை
பெற்றது.மொனராகலையில் 81.32 வீத வாக்குகளையும் பதுளையில் 67.79 வீத
வாக்குகளை ஆளும் கட்சி பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.