அல்
கைதா இயக்கத்தினால் இலங்கைக்கு அச்சுறுத்தல் இல்லை அது பற்றி நாட்டு
மக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை என இராணுவப் பேச்சாளர் ருவான் வனிகசூரிய
தெரிவித்துள்ளார். தெற்காசியாவின் சில குறித்த நாடுகளின் அல் கைதா இயங்கப்போவதாக அறிவித்துள்ளது அந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை குறிப்பிட்டப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார் .
எனினும் நாட்டில் மிகவும் வலுவானதும் தந்திரோபாயம் மிக்கதுமான ஓர் இராணுவ கட்டமைப்பு காணப்படுவதாகவும் எனவே பயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிர்நோக்க முடியும் என இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment