நாட்டின்
சுகாதாரத்துறையை விடவும் ஜனாதிபதியின் பணியாளர்களுக்கு அதிகம்
செலவிடப்படுவதாக ஜே.வி.பி கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க
தெரிவித்துள்ளார். நாட்டின் மொத்த சனத்தொகை இரண்டு கோடியாகும். சுகாதாரத்துறைக்கு 1100 கோடி ரூபா பணம் செலவிடப்படுகின்றது.
ஜனாதிபதியின் பணியாளர்களது எண்ணிக்கை 1348
பேர். அவர்களுக்கான செலவு 1340 கோடி ரூபாவாகும்.ஜனாதிபதி செயலணியின் தலைவர்
வேறும் ஆறு அரச நிறுவனங்களில் முக்கிய பதவிகளை வகித்து வருகின்றார்.நபர்
ஒருவரினால் இத்தனை பதவிகளை வகித்து தமது கடமைகளை ஆற்ற முடியுமா என்பது
கேள்விக்குறியே என அனுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றில் நேற்று கேள்வி
எழுப்பியுள்ளார்.
0 comments:
Post a Comment