தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பிரயோக
விஞ்ஞான பீடத்தில், கல்வி பயிலும் முதலாம் வருட மாணவர்களுக்கு, இரண்டாம் வருட
மாணவர்களால் வரவேற்பளிக்கும் நிகழ்வு 22-09-2014ல்
இப்பல்கலைக்கழகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இரண்டாம் வருட மாணவர்களால் ஏற்பாடு
செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வுக்கு பிரயோக விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி கலாநிதி
சபீனா இம்தியாஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்தார். விசேட அதிதிகளாக கலாநிதி
கோமதிராஜ் மற்றும் கலாநிதி யூ.எல்.செயினுடீன் ஆகியோரும் ஏனைய கல்விசார் கல்விசார
உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்த அதேவேளை பிரயோக விஞ்ஞான பீடத்தில் கல்வி
பயிலும் தமிழ் சிங்கள முஸ்லிம் மாணவர்கள் அனைவரும் இணைந்திருந்தனர்.
0 comments:
Post a Comment