எஸ்.அஸ்ரப்கான்;
கல்முனை -அக்கரைப்பற்று பிரதான வீதியில், கல்முனை ஸாஹிரா கல்லூரி சந்திக்கு அருகில் இன்று (23) காலை இடம்பெற்ற வீதி விபத்தில் சாய்ந்தமருது ஹொஸ்பிடல் வீதியை சேர்ந்த 60 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையான எம்.எல்.ஏ. ஹமீட் என்பவர் மரணமடைந்துள்ளார்.
காலை 10 மணியளவில் 2 மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேராக மோதியதாலேயே இவ்விபத்து சம்பவித்துள்ளது.
இதன்போது காயமடைந்த மற்றொருவரான கல்முனை நியூ வீதியை சேர்ந்த 38 வயதுடைய ஏ.எச். முர்ஷித் என்பவர் சிகிச்சைகளுக்காக கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.காலை 10 மணியளவில் 2 மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேராக மோதியதாலேயே இவ்விபத்து சம்பவித்துள்ளது.
0 comments:
Post a Comment