இலங்கையில்
 பௌத்தர்களுக்கும் இந்துக்களுக்கும் எதிராகத் தலைதூக்கியுள்ள 
முஸ்லிம் பயங்கரவாதம் தொடர்பில் கண்களை மூடிக் கொண்டு, உலகில் பௌத்த 
பயங்கரவாதம் தலைதூக்கி வருவதாக ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்த கருத்தானது 
கவலைக்குரியதாகும் எனத் தெரிவித்த பெளத்த கடும்போக்கு அமைப்பான 
பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இலங்கையில்
 பௌத்தர்களின் பயங்கரவாதம் கிடையாது என்றும் தெரிவித்துள்ளார் .
இது தொடர்பாக கலகொட அத்தே ஞானசார தேரர் 
மேலும் தெரிவிக்கையில், ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் பொறுப்பான 
பதவி வகிப்பவர். அவ்வாறானவர் பொறுப்பற்ற ரீதியில் கருத்துக்களை 
வெளியிடக்கூடாது. எதையாவது கூற வேண்டுமானால் சிந்தித்து புத்திக் 
கூர்மையுடன் தெரிவிக்க வேண்டும்.
இலங்கையில் பௌத்த பயங்கரவாதம் 
கிடையாது மாறாக முஸ்லிம் அடிப்படைவாதமும் பயங்கரவாதமும் சேர்ந்து 
பௌத்த இந்த மதங்களை ஒழிப்பதற்கான சதித்திட்டங்களை 
முன்னெடுக்கின்றது. ஆனால் நாம் இந்துக்களையும் இணைத்துக்கொண்டு 
அம் மதத்தை பாதுகாக்கும் திட்டங்களை முன்னெடுக்கின்றோம்.
உலகமே இன்று முஸ்லிம் 
பயங்கரவாதத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. எங்கும் பௌத்த 
பயங்கரவாதம் இல்லை. பௌத்தர்கள் அஹிம்சையை கடைப்பிடிப்பவர்கள். 
பயங்கரவாதிகள் அல்ல என்பதை ஐ.நா.செயலாளர் புரிந்து கொள்ள வேண்டுமென்றும் 
கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார் .-TC