M.ரிஸ்னி முஹம்மட்;

இன்று இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின்
செயலாளர் அயாத் அமீன் மதனிக்கும் , ஜனாதிபதி மஹிந்தவுக்கும் இடையில்
இன்று நியூயோர்க்கில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது . இந்த சந்திப்பில்
இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான அதிகரித்துவரும் சூழ்நிலை குறித்து
தனது கவலையை இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் செயலாளர் ஜனாதிபதியிடம்
முன்வைத்துள்ளார் . இதன்போது ஜனாதிபதி மஹிந்த முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான
எந்த சம்பவத்தையும் கையாள உடனடியாக நடவடிக்கை எடுக்கப்டும் என உறுதி
வழங்கியுள்ளார் .
அதேவேளை இலங்கைக்கு வந்து நாட்டின்
நிலைமைகளை நேரில் காணுமாறு மஹிந்த ராஜபக்ஷ இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின்
செயலாளருக்கு அழைப்பு விடுத்துள்ளார் .
உலகில் ஐநாவுக்கு அடுத்து பெரிய அமைப்பாக
கருதப்படும் 57 முஸ்லிம் நாடுகளை ஒன்றிணைத்த இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு
இலங்கை முஸ்லிம்கள் தொடர்பில் தனது கவனத்தை இதற்கு முன்னர் இரு தடவைகள்
வெளிப்படுத்தியுள்ளது.
இங்கையில் சட்டத்தின் ஆட்சியை அமுல்
படுத்தி குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த வேண்டும் என இஸ்லாமிய
ஒத்துழைப்பு அமைப்பு (OIC) அரசாங்கத்தை கோரியுள்ளது . முஸ்லிம்களுக்கு
எதிரான தென் இலங்கையில்ஏற்பட்டுள்ள தற்போதிய சூழ்நிலை தொடர்பில் ஆழ்ந்த
கவலையை அது வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் இஸ்லாமிய
ஒத்துழைப்பு அமைப்பு- இலங்கையில் அதிகரித்து வரும் இனவாதம் குறித்து தனது
கவலையை அரசாங்கதுக்கு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது .