• Latest News

    September 18, 2014

    நிந்தவூர் அல் - மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் மூன்று மாடிக் கட்டிடம் இன்று திறந்து வைக்கப்பட்டது – கிழக்கு மாகாண ஆளுநர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்

    எம்.சஹாப்தீன்:
    நிந்தவூர் கமு/கமு/அல் - மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மூன்று மாடிக் கட்டிடத்தினை இன்று காலை 10 மணியளவில் கிழக்கு மாகாண ஆளுநர் ரியர் அட்மிரல் மொகான் ஜயவிக்கிரம திறந்து வைத்தார்.

    மாகாண குறித்து ஒதுக்கிய அபிவிருத்தி நிதியில் (PSDG)) சுமார் ரூபா 10 மில்லியன் செலவில் நிந்தவூர் அல்-மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் நிர்மாணிக்கப்பட்ட மூன்று மாடி வகுப்பறைக் கட்டிடத்தின் திறப்பு விழா இன்று மிகவும் கோலாகரமாக அதிபர் திருமதி என்.யூ.எச்.எம்.சித்தீக் தலைமையில் நடைபெற்றது.

    இவ்விழாவில் நிந்தவூர் பிரதேச சபையின் உறுப்பினர் வை.எல்.சுலைமாலெவ்வையின் அழைப்பின் பேரில் வருகை தந்த கிழக்கு மாகாண ஆளுநர் ரியர் அட்மிரல் மொகான் ஜயவிக்கிரம பிரதம அதிதியாக கலந்து கொண்டார். மற்றும் கிழக்கு மாகாண சபை அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வை, கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர்களான சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் ஏ.எல்.எம்.நசீர், ஏ.எல்.தவம், ஏ.அமீர் முஹம்மட் லெப்பை, கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் என்.என்.ஏ.புஸ்பகுமார, கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிஸாம், கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல், சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.சஹதுல் நஜீம், நிந்தவூர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எல்.எம்.சலீம், நிந்தவூர் பிரதேச சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர் வை.எல்.சுலைமாலெப்பை உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

    இவ்விழாவில் மாணவிகளின் நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. கிழக்கு மாகாண ஆளுநர் விழாவின் ஏற்பாடுகள் குறித்து விசேட நன்றிகளை பாடசாலைக்கு தெரிவித்தார். இப்பாடசாலையின் தேவைகளுக்கு தமது அலுவலக காரியாலயத்தின் கதவுகள் என்றும் திறந்திருக்கும் என தமது உரையில் குறிப்பிட்டார்.






























    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நிந்தவூர் அல் - மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் மூன்று மாடிக் கட்டிடம் இன்று திறந்து வைக்கப்பட்டது – கிழக்கு மாகாண ஆளுநர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top