• Latest News

    September 16, 2014

    இலங்கை அரசியல் நாயகன் மர்ஹூம் அஸ்ரப்

    மறைந்தும் மணம் வீசும்
    பூவே!
    அடக்கியும்,
    எங்களை ஆட்கொள்ளும்
    அறிஞரே!
    இறந்தும்
    இயக்கிக்கொண்டிருக்கும்
    தலைவரே!
    புதைந்தும் பேசப்படும்
    பாக்கியவானே!
    மக்கியும் மாண்புடன் மிளிரும்
    மகானே!
    உடல் விட்டு
    உயிர் பிரிந்தும்
    உள்ளங்களில் வாழும்
    உத்தமரே!
    அடக்கியும் அடங்கா
    துணிச்சல் வீரரே!

    உதிர்த்த கனமே உதிர்ந்தீரே!
    உதிரத்தை உரமாக்கி
    உலகத் தலைவர்களை உருவாக்கினீர்களே!

    மரணம்
    உன்னைத் தழுவியதால்
    நீங்கள்
    மரித்து விட்டீரென்பதாய் பொருளாகாது!

    உங்களவர்கள் மரிப்பதோ!
    உங்கள் சிந்தனையில் நீராட பல்லாயிரம் பேரை உருவாக்கவே!

    இன்றும்
    உங்கள் உணர்வுகளோடுதான்இ
    முஸ்லிம் அரசியல் உம்மாவிற்கு உணவளிக்கிறோம்

    உங்கள் கொள்கைகளிலேதான்
    இன்றும் திடமாக உள்ளோம்

    உங்கள் வழிகாட்டல்களிலே தான்
    இன்றும்
    திடகாத்திரமாய்,நெஞ்சை நிமிர்த்தி
    பாதத் சுவடுகளை
    எடுத்து வைக்கிறோம்

    உங்கள் சிந்தனைகள் தான்
    இன்று எங்களை சிந்தனையாய்
    எங்களை சிறப்பித்துக்கொண்டிருக்கிறது

    உங்கள் வரலாறுகளை
    வாசித்திடினிலே!
    இரத்தம் கொதிக்கிறது
    இதயம் துடிக்கிறது
    கண்கள் கலங்குகிறது
    ரோமங்கள் சிலிர்க்கின்றனவே!
    ஏனோ இது?

    கண் எதிரே!
    மௌத்தை கண்டும்
    கிஞ்சித்தும் கலக்கமில்லாது
    கபன் சீலையுடன்
    நடைபயின்றவரே!
    எப்போதுதான்
    உங்கள் பாதச் சுவடுகளை பின்பற்றும்
    தலைவர்கள் உருவாகப் போகிறார்களோ!

    இறைவா!
    இச் சிறப்புற்றோருக்கு
    உன்
    உயர் சுவனம்
    ஜென்னத்துல் பிர்தௌசை
    நஸீப் ஆக்கிவிடு!

    சுவனத்து காற்றை நுகர்ந்திடவும்
    கனிகளை புசித்திடவும்
    அருள் பாலிப்பாயாக!

    ஆமீன் ஆமீன்
    யாரப்பல் ஆலமீன்
    (துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்)
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இலங்கை அரசியல் நாயகன் மர்ஹூம் அஸ்ரப் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top