நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலையின் கடமையாற்றும் வைத்தியர்கள் இன்று வேலை பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளார்கள். வைத்தியசாலையில் கடந்த 27.09.2014 சனிக்கிழமை மு.ப. 02 மணிக்கு அனுமதிக்கப்பட்ட 13 மாதக் குழந்தைக்கு முறையாக வைத்தியம் நடைபெறவில்லை என்று குறிப்பிட்ட குழந்தையின் தந்தை கல்முனை பிராந்திய சுகாதார அலுவலகத்திற்கு முறைப்பாடு ஒன்றினை செய்துள்ளார். இந்த முறைப்பாட்டைக் கண்டித்தே இன்று வைத்தியர்கள் சேவையில் ஈடுபடவில்லையாம்.
இதனால், இன்று வைத்தியசாலைக்கு வெளி நோயாளர் பிரிவிற்கு வருகை தந்த நோயாளிகள் திரும்பிச் சென்றார்களாம்.
தற்போது இக்குழந்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குழந்தையின் தந்தை குறிப்பிட்டார்.
இது விடயத்தில் யார் பக்கம் சரி, பிழை உள்ளதென்பதனை வைத்திய அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு தீர்மானிப்பர். ஒருவர் முறைப்பாடு செய்தார் என்பதற்காக வைத்தியர்கள் கடமையை செய்யாது பகிஸ்கரிப்பில் ஈடுபட்டமை கண்டிக்கத்தக்கது என பொது மக்கள் தெரிவிக்கின்றார்கள். வைத்தியசாலை தங்கள் பக்கத்தில் உள்ள நியாயத்தை கூறுவதுதான் முறையாகும் எனவும் பொது மக்கள் தொவிக்கின்றார்கள்.
முறைப்பாட்டாளரின் கடிதம் உங்கள் பார்வைக்கு
0 comments:
Post a Comment