சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளதால் அவர் முதல்– அமைச்சர் பதவியை இழந்துள்ளார். அவர் தலைமையிலான மந்திரிசபையும் பதவியில் இருந்து விலக உள்ளது. ஜெயலலிதா
பதவி இழந்துள்ளதால் அடுத்து புதிய முதல்–மந்திரி தேர்வு செய்யப்பட
வேண்டும். இதனால் புதிய முதல்–மந்திரியாக யாரை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்
தேர்வு செய்வார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த தடவை
2001–ம் ஆண்டு ஜெயலலிதா முதல்– மந்திரி பதவியில் இருந்து விலக நேரிட்ட போது
ஓ.பன்னீர்செல்வம் முதல்– அமைச்சராக பதவி ஏற்றார். மீண்டும் அவர் முதல்வர்
ஆகக் கூடும் என்று கூறப்படுகிறது.
இவர்கள் தவிர முன்னாள் தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், அமைச்சர் செந்தில் பாலாஜி பெயர்களும் முதல்வர் பதவிக்கு அடிபடுகிறது.
ஆனால் இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்றிரவு தெரியவரும்.
0 comments:
Post a Comment