• Latest News

    September 18, 2014

    மரம் நடும் சவால்: மம்முட்டி சவாலை ஏற்ற சூர்யா

    நடிகர் மம்முட்டி
    நடிகர் மம்முட்டி
    மலையாள மொழித் திரைப்பட நடிகர் மம்மூட்டி விடுத்த சவாலை ஏற்றுக்கொண்ட தமிழ் மொழித் திரைப்பட நடிகர் சூர்யா மரக்கன்று ஒன்றை நட்டினார். 
     
    பசுமையான சூழலை உருவாக்கும் நோக்கத்தில் 'மை ட்ரீ சாலஞ்' (My Tree Challenge) என்று அழைக்கப்படும் மரக்கன்று நடும் போட்டி தற்போது இந்திய நடிகர்கள் மத்தியில் பிரசிச்தி பெற்று வருகிறது. கேரளா மாநிலத்தில் முதல் முறையாக தொடங்கப்பட்ட இந்த புதிய முயற்சியை நடிகர் மம்முட்டி தொடங்கி வைத்தார். அப்போது அவர் மரம் நடும் வீடியோ ஒன்றை பதிவு செய்து வெளியிட்டார். அப்போது அவர் பிரபல இந்திய நடிகர்கள் ஷாருக்கான், விஜய் மற்றும் சூர்யா ஆகியோருக்கும் இந்த சவாலை விடுத்தார்.


    இதனையடுத்துத்தான் நடிகர் சூர்யாவும் இதற்கான சவாலை ஏற்றுக்கொண்டு மரக்கன்று ஒன்றை நாட்டினார். அவரும் இதற்காக வெளியிட்ட வீடியோ ஒன்றில், இந்த சவாலை நடிகர்கள் அமீர்கான், மகேஷ்பாபு, மற்றும் சுதீப் ஆகியோருக்கு விடுப்பதாக தெரிவித்துள்ளார்.
    நடிகர் சூர்யா

    மக்களின் தேவைக்காக அழிக்கப்படும் காடுகள் மற்றும் மரங்களால், சுற்றுபுறச்சூழல் மாசுப்பட்டு வருவது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தவும், நிறைய மரக்கன்றுகளை மக்கள் நடுவதற்கு ஊக்கம் அளிக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இதுவரை இந்த சவாலை நடிகர்கள் விஜய், மகேஷ் பாபு, வினீத் ஸ்ரீநிவாசன், அஜு வர்கீஸ் உள்ளிட்டோரும் ஏற்றிருக்கிறார்கள்.

    இவ்வாறு பிரசித்தி பெற்று வரும் இந்த சவால், நடிகர்கள் மத்தியில் மட்டும் இல்லாமல் அவர்களது ரசிகர்கள் மத்தியிலும் பரவி வருகிறது. பொது மக்கள் பலரும் இதனால் மரக்கன்றுகளை நட்டு, அவற்றை பரமாரித்து வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதே சவால் கேரளா மாநிலத்தில், அம்மாநில முதல்வர் உம்மன் சாண்டிக்கும் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
    தற்போது கேரளா மாநிலத்தில் மாத்திரம் அல்லாமல், தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட ஏனைய இந்திய மாநிலங்களிலும் இந்த 'மை ட்ரீ சாலஞ்' (My Tree Challenge) வேகமாக பரப்பப்பட்டு வருகிறது.

    உலகளவில் பிரபலமாகிய 'ஐஸ் பக்கெட் சாலஞ்' (Ice Bucket Challenge) ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவாக, இந்தியாவில் 'ரைஸ் பக்கெட் சாலஞ்' உருவாகியது. இதன் தொடர்ச்சியாக உருவாக்கப்பட்டுள்ள 'மை ட்ரீ சாலஞ்' (My Tree Challenge) சவால்களும், தற்போது இந்தியாவில் சமுக வலைத்தளங்கள் மூலமாகவும் வீடியோ காட்சிகள் மூலமாகவும் பிரசித்தி பெற்றுள்ளன. திரைப்பட நடிகர்கள் அதிகளவில் பங்கேற்பதும் இதன் வேகத்தை அதிகப்படுத்தியுள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மரம் நடும் சவால்: மம்முட்டி சவாலை ஏற்ற சூர்யா Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top