இலங்கையின்
பெரும்பான்மை இனத்தவர்கள் தாங்கள் சிங்கள பௌத்தர்கள் என பெருமையுடன் சொல்ல
கூடிய நிலைக்கு அல்லது துட்டகெமுனு குறித்து பெருமையுடன் பேசகூடிய
நிலைக்கு நாட்டை தனது அரசாங்கம் மாற்றியுள்ளதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாளிகாகந்தவில் அனாகரிக
தர்மபாலாவின் 150 பிறந்ததினத்தை குறிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு
உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
10 வருடங்களுக்கு முன்னர் மக்கள் தாங்கள்
சிங்களபௌத்தர்கள் என சொல்வதற்கே தயங்கினர். நான் அவ்வாறு சொன்னவேளை பலர்
என்னை கடிந்துகொண்டனர், யாரும் துட்டகெமுனுவை நினைவுகூற விரும்பவில்லை,
நாட்டிற்க்கு முதுகெலும்பை நாங்கள்
வழங்கியுள்ளதால் இன்று மன்னர் குறித்தும் வரலாறு பற்றியும்
திரைப்படங்கள்எடுக்கப்படுகின்றன. ஏனைய நாடுகளுடன் சமமாக நிற்க கூடிய
பெருமித உணர்வை நாங்கள் தேசத்தி;ற்க்கு வழங்கியுள்ளோம்.-Gtn
0 comments:
Post a Comment