• Latest News

    September 24, 2014

    உயிரோடு இருக்கும் ஆங்கில பாட ஆசிரியர் ஒருவர் இறந்து விட்டதாக மரண அறிவித்தல் சுவரொட்டிகள்!

    உயி­ரோடிருக்கும் ஆங்­கில பாட ஆசி­ரியர் ஒருவர் இறந்­து­விட்­ட­தாக மரண அறி­வித்தல் அச்­சி­டப்­பட்டு ஒட்­டப்­பட்ட சம்­பவம் ஒன்று நுவ­ரெ­லி­யாவில் நேற்று இடம்­பெற்­றுள்­ளது.

    இது தொடர்­பாக தெரி­ய­வ­ரு­வ­தா­வது, நுவ­ரெ­லியா உட­புஸ்­ஸல்­லாவ பிர­தான பாதையில் அமைந்­துள்ள  பாட­சாலை ஒன்றில் ஆங்­கில பாடம் கற்­பிக்கும் ஆசி­ரியர் ஒருவர் உயி­ருடன் இருக்கும் போதே அவர் இறந்து விட்­ட­தாக மரண அறி­வித்தல் அச்­சி­டப்­பட்டு நுவ­ரெ­லியா நக­ரத்­திலும் அதனை சூழ­வுள்ள பகு­தி­க­ளிலும் ஒட்­டப்­பட்­டுள்­ளது.

    இது தொடர்­பாக நுவ­ரெ­லியா பொலிஸ் நிலை­யத்தில் தான் புகார் ஒன்றை செய்­துள்­ள­தா­கவும் இது தொடர்­பாக நுவ­ரெ­லியா பொலிஸார் மேல­திக விசா­ர­ணை­களை முன்­னெ­டுப்­ப­தா­கவும் குறித்த ஆசி­ரியர் தெரி­வித்­துள்ளார்.

    தான் பாட­சா­லையில் மாண­வர்­களின் ஒழுக்கம் தொடர்­பா­கவும் அவர்­களின் நட­வ­டிக்­கைகள் தொடர்­பா­கவும் மிகவும் கண்­டிப்­புடன் நடந்து கொள்­வ­தா­கவும் இதனை பொருக்­காத யாரோ ஒரு சிலர் இதனை செய்­தி­ருக்­கலாம் என தான் சந்­தே­கப்­ப­டு­வ­தா­கவும் குறிப்­பி­டு­கின்றார்.

    இது தொடர்­பாக தான் பொலி­ஸாரின் கவ­னத்­திற்கு கொண்­டு­வந்­துள்­ள­தோடு பேஸ்புக் தொடர்­பாக மிகவும் கவ­ன­மாக செயற்­பட வேண்டும் எனவும் அவர் தெரி­வித்­துள்­ள­தோடு, இந்த சம்­பவம் தனக்கு எந்­த­வி­த­மான பாதிப்பையும் ஏற்படுத்த வில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இது தொடர்பாக நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: உயிரோடு இருக்கும் ஆங்கில பாட ஆசிரியர் ஒருவர் இறந்து விட்டதாக மரண அறிவித்தல் சுவரொட்டிகள்! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top