• Latest News

    September 11, 2014

    மிகப் பெரிய சுனாமி பேரலை இலங்கையை தாக்க வாய்ப்பு.

    இலங்கை மற்றும் இந்து சமுத்திர நாடுகள் மற்றுமொரு கடுமையான சுனாமிப் பேரலைத் தாக்கத்தை எதிர்கொள்ள நேரிடும் என ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

    கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி ஏற்பட்ட 9.2 ரிச்டர் அளவிலான பூகம்பம் காரணமாக ஏற்பட்ட சுனாமியினால், இலங்கை, இந்தியா உட்பட சுனாமி தாக்கிய நாடுகளில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர்.

    இதனை விட மிகப் பெரிய சுனாமி பேரலை தாக்கத்தை இந்நாடுகள் எதிர்காலத்தில் எதிர்நோக்கக் கூடும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

    அமெரிக்காவின் மியாமி பல்கலைக்கழகத்தை சேர்ந்த கெலி ஜெக்சன் உள்ளிட்ட ஆய்வு குழுவினர் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளனர்.

    அதேபோல், இந்தியா, ஐரோப்பா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளின் புவி தட்டுகளையும் இவர்கள் ஆய்வு செய்துள்ளனர்.

    இதனடிப்படையில், அண்மைய காலத்திலும் கடந்த காலங்களிலும் பூமியில் ஏற்பட்ட பூகம்பம் மற்றும் சுனாமி தாக்கங்களை ஆராய்ந்து அவர்கள் இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.

    இன்னும் பல வருடங்களின் பின்னர், இலங்கை உட்பட இந்து சமுத்திர நாடுகளை மற்றுமொரு பாரிய சுனாமி தாக்க வாய்ப்புள்ளதாக அவர்கள் கண்டறிந்துள்ளனர்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மிகப் பெரிய சுனாமி பேரலை இலங்கையை தாக்க வாய்ப்பு. Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top