13வது
திருத்தச்சட்டத்திலுள்ள அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட விடயங்கள் குறித்து
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராகவே
இருக்கின்றேன். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே பேச்சுவார்த்தைக்கு
வர மறுப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நரேந்திர
மோடியை மட்டுமன்றி எந்த நாட்டுக்கும் சென்று எவரையும் சந்திக்க முடியும்.
இதுதான் ஜனநாயகம் என்றும் அவர் கூறியுள்ளார். த ஹிந்து பத்திரிகைக்கு
வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.
காணாமல்போனவர்கள் குறித்து உள்ளூர்
விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டி ருப்பதால் சர்வதேச விசாரணையொன்றுக்கு அவசியம்
இல்லை. விசாரணைகள் சர்வதேசமயப்படுத்தப்படுவதை ஒருபோதும் அனுமதிக்கப்
போவதில்லையென்றும் ஜனாதிபதி தனது செவ்வியில் குறிப்பிட்டு ள்ளார்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் முன்னாள்
ஆணையாளர் ஆரம்பம் முதல் பக்கச்சார்பாகவே கருத்துக்களைத் தெரிவித்து
வந்தவர். இந்த நிலையில் புதிய ஆணையாளர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள
வேண்டும் எனக் கோரிக்கைவிடுத்தால் அதற்கு அனுமதி வழங்கத் தயாராக
விருப்பதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.