எஸ்.அஸ்ரப்கான்;
சிறுவர், பெண்களுக்கு எதிரான பாலியல் துஸ்பிரயோகங்கள் பற்றி பெற்றோருக்கு மாதமொரு முறையாவது விழிப்புணர்வு கருத்தரங்குகளை நடாத்துவதன் மூலம் இவ்வாறான குற்றச் செயல்களிலிருந்து இளம் சமூதாயத்தினரை பாதுகாக்க முன்வருமாறும், இவ்வாறான அசிங்கமான நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு எதிராக விசேட சட்டங்களை அமுல்படுத்தும்படியும் சாய்ந்தமருது சுபீட்சம் சமூக நற்பணி மன்றம் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

இது விடயமாக அமைப்பின் தலைவர் எம்.ஐ.எம். அன்ஸார் கையொப்பமிட்டு வெளியிட்டுள்ள அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஆசியாவின் அதிசயத்தை அசிங்கப்படுத்துவோருக்கு எதிராக விசேட சட்டங்களை அமுல்படுத்தி அதனூடாக இளம் சமூகத்தினரை பாதுகாக்கும் பொறுப்பு எம் அனைவரினதும் கடமையாகும்.
விஷேடமாக சிறுவர்கள் இலகுவில் ஏமாறக்கூடியவர்கள் என்பதனை நன்கறிந்து காமுகர்கள் பரிசுப் பொருட்களையோ, தீண்பண்டங்களையோ அல்லது ஒரு தொகைப்பணத்தையோ கொடுத்து அவர்களை உளவியல் ரீதியாக அணுகி காம இச்சைகளுக்கு உட்படுத்துகின்றனர். அண்மையில் கனேவத்தை பன்னவை பிரதேசத்திலும், கல்கமுவ பிரதேசத்திலும் இரு சிறுமிகள் கப்பம் கோரும் நோக்கில் கடத்தப்பட்டனர். அதே போல் காத்தான்குடி பிரதேசத்திலும் சிறுமி ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு நாட்டின் நாலா பாகங்களிலும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் நடைபெறுவதுடன் சிறுவர்கள் கடத்தப்பட்டு கப்பம் கோரும் சம்பவங்களும் நடைபெற்ற வண்ணமேயுள்ளன. இதனால் தங்களது குழந்தைகளை பாடசாலைகளுக்கு அனுப்பிவிட்டு மீண்டும் பிள்ளை வீடு வரும்வரை பெற்றோர்கள் தவிப்புடனும், தயக்கத்துடனும் இருக்கின்றனர். இந்நிலைமை தொடருமேயானால் எதிர்காலத்தில் சிறுவர்கள் கல்வி கற்பதில் பல தடைகள் ஏற்படலாம். ஆனால் கல்வி கற்பது அடிப்படை உரிமைகளில் ஒன்றாகும்.
இவ்விடயத்தில் புலனாய்வுத்துறை உத்தியோகத்தர்களும், பொலிஸ் அதிகாரிகளும் மிகவும் விவேகமாகவும், புத்திசாதிர்யத்துடனும் செயற்பட்டு சந்தேக நபர்களைக் கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவது பாராட்டத்தக்க விடயமாகும். இருந்த போதிலும் காமுகர்களின் அட்டகாசம் தொடர்ந்த வண்ணமே உள்ளன. அதிகமான பெற்றோர்கள் தங்களது தொழில் சார்ந்த துறையில் அதிக அக்கறை காட்டுவதும், இவ்வாறான விடயங்களில் விளிப்புணர்வின்மையும் இதற்கு ஒரு காரணமாகும். பெற்றோர்கள், பிரதேச வாசிகள், ஆசிரியர்கள் ஆகியோர் இவ்விடயத்தில் கவனம் செலுத்தி தங்களினது முழுப் பங்களிப்பினையும் பொலிசாருக்கும், சிறுவர் துஷ்பிரயோக உத்தியோகஸ்தர்களுக்கும், மனித உரிமை அமைபபுக்களுக்கும் வழங்க வேண்டியது இன்றைய காலத்தின் தேவையாகவுள்ளது. வெளியிடங்களில் இருந்து வந்து கூலி வேலை செய்பவர்கள். உளவியல் ரிதியாக பாதிக்கப்பட்டவர்கள், தொழிலின்றி அலைந்து திரிபவர்கள, போதைவஸடுக்கு அடிமையானவர்கள்; ஆகியோரினாலேயே இவ்வாறான சிறுவர் கடத்தல், பாலியல் துஷ்பிரயோகங்கள் அனேகமாக நடைபெறுவதாகத் தெரியவருகிறது.
எமது எதிர்கால சந்ததியினரை இவ்வாறான காமுகர்களிடமிருந்தும் கடத்தல் காரர்களிடமிருந்தும் காப்பாற்றும் பொறுப்பு அனைவரினதும் கடமையாகும். அதற்காக அணைத்து பெற்றோர்களுக்கும் மாணவ மாணவிகளுக்கும் பாடசாலை பிரதேச செயலக மட்டத்தில் குறைந்தது மாதமொரு முறையாவது விழிப்புணர்வுக் கருத்தரங்குககள் நடாத்தப்பட வேணடும். அண்மையில் காத்தான்குடிப்பிரதேசததில் 8 வயது நிறம்பிய பாத்திமா ஸீமா என்ற சிறுமியை பாலியல் வல்லுறவுறவுக்கு உட்படுத்தி கொலை செய்த சந்தேக நபர் சார்பாக சட்டத்தரணிகள் எவரும் ஆஜராகக் கூடாது என அப்பிரதேசவாசிகளால் மனிதாபிமான வேண்டுகோள் ஒன்றும் முன்வைக்கப்பட்டுள்ளமை பாராட்டத்தக்க விடயமாகும். இவ்வாறான செயற்பாடுகள் குற்றச்செயல்களை குறைப்பதற்கு ஏதுவாக இருக்கும் என்பதனையும் குறிப்பிட விரும்புகின்றோம்.
ஆசியாவின் அதிசயம் என்ற பெயருக்கு அசிங்கம் ஏற்படுத்தும் இவ்வாறான ஈனச் செயல்களைப்புரிகின்ற கயவர்களுக்கு கருணை காட்டக்கூடாது என்பதனையும் இவர்களுக்கு வழங்கப்படும் தண்டனைகள் இவர்களைப் போன்ற ஏனையோரக்கும் ஒரு பாடமாக அமைய வேண்டும் என்பதனையும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் தயவான கவனத்திற்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம் என்றுமுள்ளது.

0 comments:
Post a Comment