வலியை ஏற்படுத்த வேண்டுமாயின் ஜே.வி.பிக்கு வாக்களிக்குமாறும் அதன் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
செவனகலையில் அண்மையில் நடைபெற்ற தேர்தல்
பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். இம்முறை
ஏன் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களிக்க போகிறீர்கள் என நான் அந்த
கட்சியினரிடம் கேள்வி எழுப்புகிறேன். ஆளும் கட்சியினரும் ஐக்கிய தேசியக்
கட்சியினரும் உற்ற நண்பர்கள் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.
இவர்கள் ஒன்றாக வர்த்தகத்தில் ஈடுபடும்
நபர்கள். இதனை நாங்கள் நாடாளுமன்றத்தில் பார்த்துள்ளோம். ஒன்றாக
விருந்துகளுக்கு, இரவு நேர களியாட்ட விடுதிகளும் செல்லும் நபர்கள். ஐக்கிய
தேசியக் கட்சி மக்களுடன் கொடுக்கல் வாங்கல் செய்வதில்லை.
அரசாங்கத்தில் இருப்பவர்களுடன்தான் அவர்கள்
கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுகின்றனர். ஐ.தே.கட்சியில் உள்ள பலர்
தலைவர்கள் இப்படியானவர்களே எனவும் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.