• Latest News

    September 14, 2014

    கல்முனைக் கல்வி வலயத்திற்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் யார்? இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் கேள்வி

    எஸ்.அஷ்ரப்கான்: கல்முனைக் கல்வி வலயத்திற்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் யார்?          மாகாணக் கல்விப் பணிப்பாளர் தம் கடமைகளைப் புறக்கணிக்கலாமா? என இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

    கல்முனை கல்வி வலயத்தின் பாடசாலை, கல்வி அலுவலக நடவடிக்கைகளில் ஈடுபடமாட்டேன் என்று  கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ. நிஸாம் அறிவித்ததாக ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பாக சங்கம் விடுத்தள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
    இது விடயமாக மேலும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

    எதிர்காலத்தில் கல்முனை முஸ்லிம் மற்றும் சாய்ந்தமருது கல்விக்கோட்டப் பாட சாலைகளின் நிர்வாக நடவடிக்கை எதிலும் நேரடியாகச் சம்பந்தப்படமாட்டேன். எனவும், இதற்காக மேலதிக மாகாணக் கல்விப்பணிப்பாளர் ஒருவரை நியமித்துள் ளேன் எனவும், தமது நடவடிக்கைகள் குறித்து, பிரதேச பாராளுமன்றப் பிரதிநிதி யொருவர் மாகாண ஆளுநரிடம் முறையிட்டுள்ளதையடுத்து, தாம் இந்த முடிவுக்கு வந்துள்ளதாகவும், இதுகுறித்து கல்முனை வலயக் கல்விப்பணிப்பாளருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்;ளதாகவும் அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    கிழக்கு மாகாணம், இருமொழி பேசும் மூவின மக்களையும், அவ்வாறே மூவின மக்களைப் பிரதி நிதித்தவப்படுத்தும்; பல கட்சி பிரதிநிதிகளையும் மாகாண சபை யிலும், பாராளுமன்றத்திலும் கொண்டுள்ள மாகாணமாகும். இதில் மாற்றுக் கருத் திற்கு இடமிருக்காது.

    அவ்வாறே, கிழக்கு மாகாணத்திலுள்ள 17 கல்வி வலயங்களும், சிங்கள, தமிழ், முஸ்லிம் மாணவர்களையும், ஆசிரியர்களையும், அதிபர்களையும், பாடசாலைகளை யும், கல்விக் கோட்டங்களையும் கொண்டுள்ளது என்றால் அதுவும் மிகையாகாது.

    இந்நிலையில், ஒரு கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதியொருவர் தம் கடமைகளில் தலையிட்டார் என்பதற்காக, திணைக்களமொன்றின் நிறைவேற்றுத்தர சிரேஷ;ட அதி காரியொருவர், தம்நிர்வாகக் கடமைகளைப் புறக்கணிப்பதையோ, அதனை கனிஷ;ட தர அதிகாரியொருவரின் பொறுப்பில் ஒப்படைப்பதையோ கல்வித்துறைசார் ஆர்வலர் கள் எவரும் சுயமாக ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்பதும் யதார்த்தமாகும்.

    இதனை கல்வித்துறைசார் தொழிற்சங்கமெதுவும் எந்தவொரு சூழ்நிலையிலும் ஏற்றுக் கொள்ளவும் மாட்டாது. ஏற்றுக் கொள்ளவும் முடியாது. மாறாக, அதனை யதார்த்த பூர்வமான, நியாய பூர்வமான அணுகு முறைகள் மூலம் தீர்த்துக்கௌ;ள முயற்சிப்பதையே எப்போதும் விரும்பும்.

    இதேவேளை, ஆளுநரிடத்திலான இந்த முறையீட்டுக்கு, குறித்த கல்வி வலயத்தில் அண்மையில் இடம்பெற்ற ஆசிரியர் இடமாற்றமே காரணம் எனவும் அறியமுடிகிறது. வருட ஆரம்பத்தில் அல்லது தவணை ஆரம்பத்திலேயே ஆசிரியர் இடமாற்றங்கள் இடம்பெறல் வேண்டும் என மாகாண முதலமைச்சர்களைப் ஜனாதிபதி பணித் திருந்த நிலையிலேயே இந்த இடமாற்றங்கள் இடம்பெற்றுள்ளது.

    இலங்கையைப் பொறுத்தவரையில் கல்வியும், அரசியலும் ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகள்; என்றால் அது மிகையாகாது. கல்வியில் அரசியல் இரண்டறக் கலந் துள்ளது என்பதற்கு இங்கு அமைக்கப்பட்டுள்ள தனி இனக் கல்;வி வலயங்கள் போதுமான சான்றாகும். ஏன், இதற்கு மேலதிகமாக. கிழக்கு கல்வி நிர்வாகிகள் சங்கம் அடிக்கடி சுட்டிக்காட்டும் வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கான 3ஆம் தர அதிகாரிகளின் நியமனம் இதற்கு மேலும் வளம்சேர்ப்பதாயுள்ளது.

    மேலும் சொல்லப்போனால், கிழக்கு கல்வி வலயமொன்றில், தொழிற்சங்கமொன்றின் பாடசாலையொன்றிற்கான சந்தா பட்டியல் டிசம்பரில் 17 பேரைக் கொண்டிருந்தது. அது பெப்ருவரியில் 16 ஆகவும், ஏப்ரலில் 11 ஆகவும், மேயில் 3ஆகவும், ஜூனில் 1ஆகவும் மாறியிருந்தது. உள்ளக ஆசிரியர் இடமாற்றமே இதற்குக் காரணம் எனத் தெரியவருகின்றது.

    இதுதவிர,இதேசெய்தித்தாள் தந்துள்ள மற்றொருசெய்தியின்படி, மாகாண அமைச்சர் ஒருவர், கல்வி வலய நிர்வாகத்தில் அடிக்கடி தலையிட்டு வருவதாகவும், இது தொடர்பில் கேள்வி எழுப்பிய ஆசிரியர் ஒருவர் தூரப் பாடசாலையொன்றிற்கு இட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும்,இதனால் அவ்வலய அதிபர் ஆசிரியர்கள் மிகவும் பயந்த நிலையில் கடமையாற்றுவதாகவும்,அண்மையில் அதிபர்கள் கூட்டமொன்றில் திடுதிடுப்பெனப் புகுந்த அவர், அங்கிருந்தவர்களைத் தாறுமாறாகத் திட்டியதாகவும் அறிய முடிகிறது.

    இதுகுறித்து ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதால், இந்தக் கல்விவலயத்தின் பாடசாலை நிர்வாக நடவடிக்கைகளைப் புறக்கணித்து, மேலதிக மாகாணக்கல்விப் பணிப்பாளர்

    நியமனம் செய்யப்படுவாரா? எனவும் அச்சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

    இந்தப் புறக்கணிப்பு காரணமாக, கல்முனை முஸ்லிம் மற்றும் சாய்ந்தமருது கல் விக் கோட்டப்பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாகாணக் கல்விப் பணிப்பாளர் மூலமான தம்தொழில்சார் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியாது போய், முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ள 242 மனநோயாளர்களின் பட்டியலில் சேர்க் கப்படும் அபாய நிலைமைக்கு ஆளாகாமலிருக்க அனைத்து கல்வித்துறைசார் ஆர்வலர்களின் கவனமும் ஈர்க்கப்படுதல் அவசியமாகும் என்றும் அந்தக் கோரிக்கை யில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கல்முனைக் கல்வி வலயத்திற்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் யார்? இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் கேள்வி Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top