• Latest News

    September 16, 2014

    2013 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையில் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியைச் மாணவர்கள் அம்பாறை மாவட்டத்தில் முதல் இரு நிலையில்

    Displaying best 6.jpg
    எம்.ஐ.எம்.அஸ்ஹர்: 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற க.பொ.த. சாதாரணதரப் பரீட்சை முடிவுகளின் படி கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் அம்பாறை மாவட்டத்தில் முதல் இரு நிலைகளைப் பெற்றுள்ளனர்.

    அண்மையில் க.பொ.த.சாதாரணதரப் பரீட்சையின் விடைத்தாள்களை மீள் பரிசோதனை செய்த  பின்னர் இலங்கைப் பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ள பரீட்சை முடிவுகளை மாவட்ட ரீதியில் கல்வியமைச்சு பட்டியலிட்டுள்ளது.

    இதன்படி கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியைச் சேர்ந்த அமீர் முஹம்மட் சஸ்னி அம்பாறை மாவட்டத்தில் முதலாம் இடத்தையும் , கலீல் முஹம்மட் அகீல் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

    2013 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த.சாதாரணதரப் பரீட்சையில் மேற்படி இரு மாணவர்களும் 9 பாடங்களிலும் ஏ சித்தி பெற்றிருந்ததுடன் மேலும் 6 மாணவர்களும் சகல பாடங்களிலும் 9 ' ஏ ' சித்திகளைப் பெற்றிருந்தனர்.

    தற்போது கல்லூரியில் உயர்தர விஞ்ஞானப் பிரிவில் கல்வி கற்கும் ஏ.எம்.சஸ்னி மற்றும் கே.எம்.அகீல் ஆகியோரை பாராட்டி கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் வாழ்த்துச் செய்தியினை அனுப்பி வைத்துள்ளதுடன் கல்லூரி அதிபர் பீ.எம்.எம்.பதுறுதீன் , பிரதி அதிபரும் முன்னாள் க.பொ.த. சாதாரணதர பகுதித்தலைவருமான எம்.எஸ்.முஹம்மட் , பிரதி அதிபர்கள் , உதவி அதிபர்கள் , ஆசிரியர்கள் , மாணவர்கள் , கல்விசாரா ஊழியர்கள் , பழைய மாணவர் சங்க தாய்க்கிளை ,பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளை  ,பாடசாலை அபிவிருத்திச் சங்கம் மற்றும் நலன் விரும்பிகள் இம்மாணவர்களுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.

    மேற்குறித்த விபரம் தொடர்பில் இசுறுபாயவிலுள்ள கல்வியமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள மாவட்ட மட்ட பட்டியலினை கிழக்கு மாகாண கல்வித் திணைக்கள மேலதிக கல்விப் பணிப்பாளர் ஏ.விஜயானந்தமூர்த்தி கல்லூரி அதிபருக்கு அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
    Displaying best 1.jpg
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையில் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியைச் மாணவர்கள் அம்பாறை மாவட்டத்தில் முதல் இரு நிலையில் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top