ஜாதிக ஹெல உறுமயவின் அதுரலிய ரத்ன தேரரின் 19ம் திருத்தச் சட்ட யோசனையை ஆதரிக்கத் தயார் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஏனைய அரசியல் கட்சிகள் ஆதரவளித்தால், நாடாளுமன்றில் விவாதம் நடத்தாமலேயே சட்டத்தை நிறைவேற்றிக்கொள்ள முடியும்.
அரசாங்கம் 19ம் திருத்தச் சட்டத்தை அவசரமாக நிறைவேற்ற முயற்சிப்பதாக சில இணைய ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் இந்த சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏனைய அரசியல் கட்சிகள் ஆதரவளித்தால், நாடாளுமன்றில் விவாதம் நடத்தாமலேயே சட்டத்தை நிறைவேற்றிக்கொள்ள முடியும்.
அரசாங்கம் 19ம் திருத்தச் சட்டத்தை அவசரமாக நிறைவேற்ற முயற்சிப்பதாக சில இணைய ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் தலைவராக பிரதமர் பதவி வகிக்க வேண்டும், அமைச்சர்கள் குறைக்கப்பட வேண்டும் போன்ற பல்வேறு காரணிகள் உள்ளடங்களாக 19ம் திருத்தச் சட்ட உத்தேச யோசனை உருவாக்கப்பட்டுள்ளது.
19ம் திருத்தச் சட்டத்தை ஐக்கிய தேசியக் கட்சி அதரிக்கின்றது.
நான் நினைக்கின்றேன் ஏனைய கட்சிகளின் ஒத்துழைப்பினையும் பெற்றுக்கொள்ள முடியும் என்று.
ஏனையவர்கள் இணங்கினால் விவாதம் நடத்தாமலேயே நாடாளுமன்றில் சட்டத்தை நிறைவேற்ற முடியும் என ரணில் விக்ரமசிங்க நேற்று நாடாளுமன்றில் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இணைய தள வதந்திகளின் அடிப்படையில் அரசாங்கம் சட்டங்களை நிறைவேற்றாது என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
சட்டமொன்றை நிறைவேற்ற வேண்டுமாயின் முறையான வகையில் சட்டம் நிறைவேற்றப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 comments:
Post a Comment