• Latest News

    October 26, 2014

    ஏமாற்றமளிக்கும் வரவு செலவுத்திட்டம்: இலங்கை ஆசிரியர் சங்கம்

    ஆசிரியர் உட்பட அரச ஊழியர்கள் 10 000 ரூபா சம்பள அதிகரிப்பையே எதிர்பார்த்து கோரிக்கை விடுத்தனர். ஆனால் அரசாங்கம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் 2200 ரூபாவை மாத்திரமே சம்பள உயர்வாக வழங்கியுள்ளது. எனவே இந்த வரவு செலவுத்திட்டம் அரச ஊழியர்களுக்கு ஏமாற்றமளித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவிக்கின்றார்.
    இதே வேளை ஆசிரியர்களுக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் எந்த அடிப்படையில் வழங்கப்படவுள்ளதென தெளிவாக தெரிவிக்கப்படவில்லை.

    50 000 ஆசிரியர் உதவியாளர் நியமனம் வழங்கப்படுவதாக வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களை முறையாக போட்டிப் பரீட்சையின் மூலம் ஆசிரியர் வேலையில் இணைத்துக் கொண்டு 15 000 ரூபா அடிப்படைச் சம்பளமாக வழங்க வேண்டுமென்பதே எமது கோரிக்கையாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஏமாற்றமளிக்கும் வரவு செலவுத்திட்டம்: இலங்கை ஆசிரியர் சங்கம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top