கடந்த
06.10.2014 ஆந் திகதி கொழும்பில் நடைபெற்ற
சிறந்த ஆசிரியர்களுக்கான விருது வழங்கும் வைபவத்தில் கல்முனையை பிறப்பிடமாகவும்
சம்மாந்துறை வசிப்பிடமாகவும் கொண்ட அப்துல் மஜீட் தாஹா நழீம் ஆசிரியர் பிரதீபா பிரபா விருதினைப்
பெற்றுக்கொண்டார்.
இவர்
மர்ஹம் அப்துல் மஜீட் ஆசிரியர் மற்றும் றுக்கியா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வருமாவார்.
தனது ஆரம்பக்கல்வியை கல்முனைக்குடி அல்-அஸ்ஹர் மற்றும் அல்-மிஸ்பா வித்தியாலயத்தில்
பெற்றுக்கொண்டதுடன் தனது இடைநிலைக்கல்வியை கல்முனை ஸாஹிறாக்கல்லூரியிலும் பெற்றுக்கொண்டார்.
மேலும்,
இவர் ஒரு விஞ்ஞான இளமானி பட்டதாரியாகும். சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தில்
பிரதி அதிபராக கடமையாற்றும் இவர் சர்வதேச கூக்குள் கம்பனியின் சர்வேத வெளியீட்டாளராகவும்
மல்லிகை என்ற மாணவர்களுக்கான செயலட்டையின் உரிமையாளராகவும் காணப்படுவதுடன் ஏனைய சமூக
சேவையில் ஈடுபாடுடையவராகும்.
குறுகிய
கால ஆசிரியர் அனுபவத்துடன் இவ்விருதிப் பெற்றுக்கொண்டது விசேட அம்சமாகும். மேலும்,
இப்பகுதியில் முன்னணி ஆரம்ப்ப்பிரிவுக்கான பாடசாலையாகத் திகழும் சம்மாந்துறை முஸ்லிம்
மகளிர் வித்தியாலயத்தின் பாடசாலையின் வளர்ச்சிக்கு இவரது பங்களிப்பும் பாராட்டுக்குரியது.

0 comments:
Post a Comment