• Latest News

    October 28, 2014

    முடிவுக்கு வந்தது பொது வேட்பாளர் போட்டி!

    ஜனாதிபதி தேர்தலில் எதிர்க் கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது குறித்து இழுபட்ட சிக்கல் நிலைமை முடிவுக்கு வந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஜனவரி மாதம் இடம்பெறும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக விரும்பிய வண. சோபித தேரரும், பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.கவின் தலைவரும் அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டவருமான ரணில் விக்கிரமசிங்கவும் சந்தித்துப் பேசினர்.

    இதன் மூலமே சிக்கல் முடிவுக்கு வந்துள்ளதாகக் கூறப்படுகின்றது. இவர்கள் இருவரும் கடந்த 25 ஆம் திகதி சனிக்கிழமை கோட்டே நாகவிகாரையில் சந்தித்துப் பேசினர் எனத் தெரிய வருகின்றது. இந்த சந்திப்பின்போது ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வண. சோபித தேரர் ஆதரவு வழங்குவார் எனவும் அதற்குப் பதிலாக ரணில் ஜனாதிபதியாக தெரிவான பின்னர் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ரணில் ஒழிக்க வேண்டும் எனவும் உடன்பாடு எட்டப்பட்டதாகவும் விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

    தவிர ரணில் விக்கிரமசிங்க பொது வேட்பாளராகப் போட்டியிடும்பட்சத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் சின்னமான யானை சின்னத்தில் போட்டியிடக் கூடாது எனக் கேட்டார் என்றும் அந்தத் தகவல்கள் தெரிவித்தன. இதேசமயம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிப்புக்கு ஆதரவளிக்க ஐக்கிய தேசியக் கட்சியினர் தயார் என்றும் ஆனால் அக்கட்சியின் சின்னமான யானை சின்னத்தை தவிர்த்துப் போட்டியிட விரும்பவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. எனினும் இது குறித்து உறுதியான – உத்தியோகபூர்வமான தகவல்கள் எவையும் வெளியாகவில்லை.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: முடிவுக்கு வந்தது பொது வேட்பாளர் போட்டி! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top