நிந்தவூரைச் சேர்ந்த ஏ.எச்.திலிப் நவாஸ் மேன் முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ முன்னிலையில் கடந்த வாரம் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். இவரை பாராட்டிக் கௌரவிக்கும் வைபவம் நிந்தவூரில் 'மண்ணிண் மகுடம்' எனும் தலைப்பில் (07.10.2014) நடைபெற்றது.
இவ்விழாவில் மேன் முறையீட்டு நீதிமன்ற நீதிபதி நவாஸை பலரும் பாராட்டி நினைவுப் பொருட்களை வழங்கினார்கள். அவருக்கு பொன்னாடைகளும் போர்த்தப்பட்டன.
இதற்கு முன்னதாக மேன் முறையீட்டு நீதிமன்ற நீதிபதி நவாஸ் நிந்தவூர் பிரதேச செயலகத்தின் முன்றலில் இருந்து பிரதான வீதியினூடாக மாலைகள் அணிவித்து, வாகன ஊர்தியில் அழைத்து வரப்பட்டார்.
0 comments:
Post a Comment