• Latest News

    October 07, 2014

    கரையோர மாவட்டம் கிடைக்காவிட்டால் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜெமீல் தனது மாகாண சபை பதவியை துறப்பாரா?

    எஸ்.அஷ்ரப்கான்: ஜனாதிபதி தேர்தலுக்கு முன் கல்முனை கரையோர மாவட்டம் கிடைக்காவிட்டால் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜெமீல் தனது மாகாண சபை பதவியை துறப்பாரா என உலமா கட்சி சவால் விடுத்துள்ளது. இது பற்றி உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்ததாவது,

    ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ,ந்த அரசுடன் ,ணையும் போது செய்யப்பட்ட ஒப்பந்தத்தை அரசு நடைமுறைப்படுத்தவில்லை என்றும் எதிர் வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன் கல்முனை கரையோர மாவட்டத்தை அரசு பிரகடனப்படுத்த வேண்டும் என்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜமீல் தெரிவித்துள்ளார்.
    முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களின் செல்வாக்கு மக்கள் மத்தியில் சரியும் போது ,வ்வாறான வார்த்தை ஜாலங்களை அவிழ்த்து விட்டு அப்பாவி கிழக்கு முஸ்லிம்களை ஏமாற்றுவது முஸ்லிம் காங்கிரசுக்கு கைவந்த கலையாகும். ,ந்த அரசாங்கத்துடன் மு. கா ,ணையும் போது அரசுடன் முஸ்லிம்களின் உரிமைகள் சம்பந்தமாக ஒப்பந்தம் செய்யப்பட்டதாக அக்கட்சி சொல்கிறதெ தவிர அவ்வாறான ஒப்பந்தத்தின் நகல் பிரதி ,ன்று வரை பகிரங்கப்படுத்தப்படவில்லை. .தன் மூலம் ஒப்பந்தம் செய்தள்ளாக முஸ்லிம் மக்களை பொய் சொல்லி ஏமாற்றுகிறார்கள் என்பதை கடந்த ,ரண்டு வருடங்களாக நாம் சொல்லி வருகிறோம். ,தனை மறுத்து மேற்படி ஒப்பந்த பிரதியை ,வர்கள் ,ன்னமும் வெளியிடவில்லை.

    அத்துடன் கிழக்கு மாகாண சபையில் திவிநெகும சட்டமூலம் கொண்டு வரப்பட்ட போது ஜமீல் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் தமது தலைவரை தொடர்பு கொள்ள முயடியவில்லை என்ற பொய்யை கூறி தமது சுயநலத்தை வெளிப்படுத்தி முஸ்லிம் சமூகத்துக்கு துரோகமிழைத்தார்கள். அதே போன்று நாட்hளுமன்றத்தில் மு. கா 18வது சட்டத்துக்கு ஆதரவளித்த போது கல்முனை கரையோர மாவட்டம் பற்றி மூச்சு விடவில்லை.

    அது மட்டுமல்லாமல் கல்முனைத்தொகுதி முஸ்லிம் வாக்குகளை பெற்ற ,வர் ,ரண்டாவது தடவையாக மாகாண சபை உறுப்பினராகியும் ,வரது கட்சி ஆளுங்கட்சியாக ,ருந்தும் கல்முனை மக்கள் ,வரால் எந்தவொரு சமூக நன்மையையும் அடையவில்லை. ,வற்றை மறைப்பதற்காகவே ,வ்வாறான அறிக்கைகளை விட்டு மக்களை தொடர்ந்தும் ஏமாற்ற முனைவதை அனுமதிக்க முடியாது.


    இவ்வாறெல்லாம் தமது பதவிகளுக்கும், சுய நலன்களுக்காகவும் முஸ்லிம் சமூகத்தை அடகு வைத்து விட்டு இப்போது இன்னொரு தேர்தல் நெருங்குவதால் கல்முனை கரையோர மாவட்டம் பற்றி பேசுகிறார்கள். இவர் சொல்வது போன்று இலங்கை அரசு எதிர் வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன் கரையோர மாவட்டத்தை அறிவிக்காது போனால் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜமீல் தனது உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வாரா என்பதை சவாலாகவே கேட்கிறோம்
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கரையோர மாவட்டம் கிடைக்காவிட்டால் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜெமீல் தனது மாகாண சபை பதவியை துறப்பாரா? Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top