துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்: இலங்கையில் பேரின வாதிகளினால் முஸ்லிம்களுக்கெதிராக அரங்கேற்றப் படும் செயற்பாடுகள் நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாய் வடிவமெடுத்து ஆடிக்கொண்டிருக்கிறன.இதனை எவ்வாறு எதிர் கொள்ளுவது??என்பதில் இஸ்லாமிய அமைப்புக்கள் அனலில் பட்ட புழுப்போல் துடித்துக் கொண்டிருக்கின்றன.விடிந்தால் இன்று முஸ்லிம்களுக்கெதிராக என்ன சூழ்ச்சி அரங்கேறுமோ?எனவும், தூங்கச் செல்லும் போதுஇஇன்றைய முஸ்லிம்களுக்கெதிரான இச் சூழ்ச்சியை எவ்வாறு எதிர் கொள்வது?என்று சிந்திப்பதே முஸ்லிம் தலைவர்களுக்கு வேலை ஆகிவிட்டது.சில வேளை பேரின மக்களை அரவனைத்துச் செல்ல வேண்டும் என்பதற்காய் முஸ்லிம்கள் இஸ்லாமிய வரையறைகளை சற்று மீறுவதனையும் அவதானிக்க முடிகிறது.
நாம் எதற்கும் எச் சந்தர்ப்பத்திலும் யாருக்கு அஞ்சியும் இஸ்லாத்தை அடகு வைக்க வேண்டிய அவசியம் இல்லை. என்பதை தெளிவாக ஹஜ் எமக்கு உணர்த்தி நிற்கிறது.எது வித வளமோ!தெரிந்த நபர்களோ!மனித சஞ்சாரமோ! அற்ற ஒரு பூமியில் நபி இப்ராஹீம் அலை அல்லாஹ்வினது கட்டளைக்கு அமைவாக அன்னை ஹாஜரா (அலை) இஸ்மாயில் (அலை) இணையும் விட்டுச் சென்றார்கள்.இதை விடவா நாம் நிர்க்கதியான நிலையில்?நீர் தேடி அங்கும் இங்கும் அலைந்தார்கள்.அலைந்த இடத்தினையும் மக்களுக்கு படிப்பினையாய் இன்று அல்லாஹ் ஆக்கி இருப்பதுடன் இஅவர்களினது தியாகத்திற்கும்இமுயற்சிக்குமோர் பலனாக உலக அற்புதங்களில் ஒன்றான சம் சம் நீரை காலடியிலேயே ஊற்றெடுக்கச் செய்தான்.பிரச்சனைகள் தீர அல்லாஹ்வை உள்ளத்தில் நிலை நிறுத்தி முயற்சிப்போம்.தீர்வை காலடியில் எமக்கு இறைவன் கொண்டு வந்து சேர்ப்பான் என்பதில் ஐயமில்லை.அன்று நபி இப்ராஹீம்(அலை), ஹாஜரா (அலை), இஸ்மாயில் (அலை) அவர்களுக்கு எந்த இறைவன் உதவி செய்தானோ அதே இறைவனைத் தான் நாமும் இறைவனாக ஏற்றுள்ளோம்.
பேரின சக்திகள் சிலதினது கத்தி கழுத்தில் உள்ளது போன்றதொரு நிலையிலேயே இன்று இலங்கையில் முஸ்லிம் சமூகம் வாழ்ந்து வருகிறது.கத்திற்கும் களுத்திற்குமிடையிலான இடைவெளியை சுருக்கிச் செல்லும் வண்ணம் பர்மா அசின் விராது தேரரினது வருகையும் அமையப் பெற்றுள்ளது.இன்று எமது கழுத்தில் கத்தியை வைத்தது போன்றதொரு நிலை தான் தோற்றுவிக்கப் பட்டுள்ளது.ஆனால், அன்றோ அல்லாஹ்வின் கட்டளைக்காய் இஸ்லாமாயில் (அலை) இனது கழுத்தில் கத்தியை இப்ராஹீம் (அலை) வைத்தது மாத்திமல்லாது வெட்டினார்கள்.வெட்டும் கத்தி வெட்டாமல் அதன் இயற்கை தன்மையில் இருந்து மாறு பட்ட பண்பை வெளிபடுத்தியது.இன்றும், எமது கழுத்தில் கத்தி அல்லாஹ்வின் மார்க்கத்தை ஏற்ற ஒரே ஒரு காரணத்திற்காகத் தான் என்பதில் மாறு பட்ட கருத்தில்லை.நாமும், தியாகத்தோடு எமது இஸ்லாமிய பாதையை செவ்வனே அமைப்போமாக இருந்தால் நிச்சயாக எமது மறுமை வாழ்வு மிகவும் பிரகாசமானதாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
ஹஜ் போதிக்கும் பிரதான போதனைகளில் ஒன்றுதான் சர்வதேச ஒற்றுமை.நாம் ஒரு நாட்டிலாவது ஒற்றுமையுடன் உள்ளோமா??ஹஜ் செல்லும் ஒவ்வொருவரும் இப் போதனையை மனத்திற் கொண்டு செயற்படுவோமாக இருந்தாலே இப் பூமி எப்போதே சமாதானப் பூங்காவாக மிளிர்ந்திருக்கும்.இலங்கை முஸ்லிம்கள் மீதான வன்முறைகளை கட்டுப் படுத்த இயலாமைக்கு முஸ்லிம்கள் அரசியலில் பல குழுக்களாக பிரிந்து அரசியல் ஸ்திரத் தன்மை இன்மையை ஏற்படுத்தி இருப்பதும் பிரதான பங்கை வகிக்கிறது.
ஹஜ் பெருநாள் தொடர்பான வாழ்த்துச் செய்தியில் ஹஜ்ஜின் பலாபலன்களை மக்களுக்கு அள்ளிச் சொரியத் தெரிந்த அரசியல் வாதிகளிடம் எங்கே ஒற்றுமை??யாரிடமாவது கொடுத்து எழுதுவதுஇஅதில் என்ன உள்ளது?என்று பாராமலேயே வெளியிடுவதே இன்றைய பெரும் பாலான அரசியல் வாதிகளின் நிலை.முதலில், உங்கள் உங்கள் வாழ்த்தை வாசித்தாவது படிப்பினை பெறுங்கள்.
இன்றைய இஸ்லாமியரின் முதன்மை எதிரியான அமெரிக்காவினது அதிபர் பராக் ஒபாமா ஒற்றுமையை போதிக்கும் ஹஜ்ஜில் ஒற்றுமை வேண்டி பிராத்திக்க எமக்கு அறிவுரை தருகிறார்.எங்கே நாம்..??இவரின் கருத்திற்கு நாமும் வழி விட்டுள்ளோம் என்பதனால் வாய் மூடி மௌனம் காக்க வேண்டிய நிலை தான் எமக்கு.
ஒற்றுமை, தியாகம், விட்டுக் கொடுப்பு, பொறுமை போன்றவற்றை எந்த ஹஜ் போதிக்கிறதோ அந்த ஹஜ் செல்லும் விடயத்திலாவது நாம் ஒற்றுமையாய் உள்ளோமா??
ஹஜ்ஜிற்கு செல்லுவதற்கு முன்பே ஹஜ் கோட்டா விவகாரத்தில் ஒற்றுமை, விட்டுக் கொடுப்பு, தியாகங்கள் இன்றி சண்டை பிடித்து முஸ்லிம்களின் எதிரியான பொது பல சேனா விடம் செல்லும் நிலை ஏற்பட்டது. எங்கே நாம்..??
ஹஜ் பெருநாள் தீர்மானிக்கும் விவகாரத்தில் முஸ்லிம் இயக்கங்களுக்கிடையிலான ஒற்றுமை இன்மையின் விளைவால் பெருநாளை ஒட்டி சாபமும் பல வருடமாய் பின் தொடர்கிறது.
ஒற்றுமையை போதிக்கும் ஹஜ் விவகாரத்திலே ஒற்றுமை இல்லை எனும் போது ஏனைய விடயங்களை சொல்லவா வேண்டும்??
ஹஜ் தரும் போதனைகளை உள்ளத்தில் நிறுத்தி செயற்பட எல்லாம் வல்ல அல்லாஹ் எமக்கு துணை புரிவானாக.
0 comments:
Post a Comment