முனையூரான்: அப்துல் ஜவாத் ஆலிம் நம்பிக்கை பொறுப்பு அமைப்பின் அணுசரணையில் எதிர்வரும் 18.10.2014 சனிக்கிழமை நடாத்தவிருக்கும் 'சுன்னத் வல் ஜமாஅத் உலமாக்கள் மாநாட்டை' அம்பாரை மாவட்ட அஹ்லுஸ் ஸூன்னத் வல் ஜமாஅத் உலமா சபை பகிஸ்கரிப்பதாக பகிரங்கமாக அறிவித்தல் ஒன்றை விடுப்பதாக அம்பாரை மாவட்ட அஹ்லுஸ் ஸூன்னத் வல் ஜமாஅத் உலமா சபையின் தலைவர் எஸ்.ஆர்.எம். கலீல் மௌலானா தெரிவித்தார்.
இது விடயமாக அவர் விடுத்துள்ள பகிரங்க அறிவித்தலில் மேலும் குறிப்பிடும்போது,
எம்மால் இந்த மாநாடு தொடர்பாக அறிவிக்கப்பட்டபோது அதில் எமது அம்பாரை மாவட்ட அஹ்லுஸ் ஸூன்னத் வல் ஜமாஅத் உலமா சபையும் கலந்து கொள்வதென்றால் சில நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தோம். அந்த நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளப்படாததாலும், அதற்கான முடிவை உரிய நேரத்தில் அனுப்பத் தவறியதனாலுமே அம்மானாட்டில் எமது சபை கலந்துகொள்வதில்லை எனவும், அப்துல் ஜவாத் ஆலிம் நம்பிக்கை பொறுப்பு அமைப்பிற்கும் எமது அம்பாரை மாவட்ட அஹ்லுஸ் ஸூன்னத் வல் ஜமாஅத் உலமா சபைக்கும் எவ்வித தொடர்புமில்லை. என்பதை ஸூன்னத் வல் ஜமாஅத் உலமாக்களுக்கும் ஏனைய நல்லுள்ளம் படைத்த பொதுமக்களுக்கும் அறிவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:
Post a Comment