• Latest News

    October 10, 2014

    றினோன் விளையாட்டுக் கழகத்தின் வெற்றி வீரர்கள் கௌரவிப்பு

     எஸ்.அஷ்ரப்கான்:
    கல்முனை றினோன் விளையாட்டுக் கழகத்தின் வெற்றி வீரர்கள் கௌரவிப்பு விழா  மாளிகைக்காடு பிஸ்மில்லா ஹோட்டல் மண்டபத்தில் கழகத் தலைவர் ஆசிரியர் ஐ.எல்.எம். ஜின்னா தலைமையில் இடம்பெற்றது.

    காரைதீவு ஜொலி கிங்ஸ் விளையாட்டுக்கழகம் நடாத்திய அமரர் பேரின்பம் சர்மேந்திரன் வெற்றிக்கிண்ணம் 2013ஃ 2014 கிண்ணத்தினை கடந்த 12 வருடங்களில் முதல் முறையாக சுவீகரித்த வெற்றிக் கொண்டாட்டத்தினையே குறித்த தினம் கல்முனை றினோன் விளையாட்டுக் கழகத்தினால் கொண்டாடப்பட்டது.

    இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாரை மாவட்ட மக்கள் பிரதிநிதிகளின் செயலாளரும், கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ஏ.எம். பறக்கத்துள்ளாஹ் கலந்து சிறப்பித்தார்.

    இந்நிகழ்வுகளின்போது கல்முனை றினோன் விளையாட்டுக்கழகத்தின் ஆணிவேராய் வளர்ச்சியில் அயராது உழைத்துவரும் எஸ்.எச்.எம். அஸ்மி அதிதிகளால் பென்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

    மேலும் இக்கழகம் தோற்றுவிக்கப்பட்டு 12 வருடகாலத்திலும் முதலாவதாக  வெற்றிக்கிண்ணத்தை பெற காரணமான கழக வீரர்களுக்கு நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. அத்துடன் கழகத்தின் சிரேஷ்ட வீரர் எம்.எச்.றினாஸ் முஹம்மட் கழகத்திற்காக வழங்கிய 32  ஆயிரம் ரூபா பெறுமதியான காசோலையை தலைவர் ஜின்னா ஆசிரியரிடம்  வழங்கிவைக்கப்பட்டது. இந்நிகழ்வுகளின் இறுதியில் உதவிச் செயலாளர் எம்.எப்.எம்.ஏ. றிப்கி கழகத்தின் கடந்து வந்த பாதை பற்றி விரிவாக எடுத்துக் கூறினார்.

    இந்நிகழ்விற்கு கௌரவ அதிதிகளாக அட்டாளைச்சேனை கல்விக் கல்லூரியின் முன்னாள் விரிவுரையாளர் எம்.ஐ.எம். முஸ்தபா, முன்னாள் கல்முனை பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் ஸப்றி நஸார், அம்பாரை மாவட்ட உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் செயலாளரும், கல்முனை சனிமௌண்ட் விளையாட்டுக்கழகத்தின் செயலாளருமான எம்.ஐ.எம். அப்துல் மனாப், ஆகியோருடன் கல்முனை டொப் ஹீரோஸ் விளையாட்டுக்கழகத்தின் தலைவர் கே.எல். சுபைர், கல்முனை ஜிம்கானா விளையாட்டுக்கழகத்தின் செயலாளர் எம்.லாபீர் உட்பட பிரதேச கழகங்களின் விளையாட்டு வீரர்கள் உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்
    Displaying ALIM0041.JPGDisplaying ALIM0045.JPGDisplaying ALIM0047.JPGDisplaying ALIM0051.JPGDisplaying ALIM0054.JPGDisplaying ALIM0055.JPGDisplaying ALIM0062.JPGDisplaying ALIM0069.JPGDisplaying ALIM0036.JPG
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: றினோன் விளையாட்டுக் கழகத்தின் வெற்றி வீரர்கள் கௌரவிப்பு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top