• Latest News

    October 10, 2014

    மாற்றுத்திறனாளிகளும் எங்களது உடன்பிறந்தவர்களே பாராளமன்ற உறுப்பினர் பைசால் காசிம்

    Displaying MP.JPGஎம்.வை.அமீர்:
    இறைவனது படைப்பினங்களில் மேலான படைப்பான மானிடப்படைப்பில் மாற்றுத்திறனாளிகளையும் படைத்திருக்கின்றான். சுகதேகியாக வாழும் மனிதர்கள் இவ்வாறானவர்களை எவ்வாறு கவனிக்கின்றார்கள் என சோதிப்பதற்காகவே படைத்துள்ளான் என்பதை சுகதேகியாக வாழும் ஒவ்வொரு மனிதனும் விளங்கிக்கொள்ள வேண்டும் என திகாமடுல்ல மாவட்ட பாராளமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதி அமைச்சருமான பைசால் காசிம் தெரிவித்தார்.


    மாற்றுத்திறனாளிகளது வாழ்க்கைத்தரத்தை உயர்த்தக்கோருவது தொடர்பான ஒன்று கூடல் ஒன்று 2014-10-08ல் கல்முனை அல் பஹ்ரியா வித்தியாலய கேட்போர் கூடத்தில் மாற்றுத்திரனாளிகள் அமைப்பின் தலைவர் மீராமுகைதீன் காலிதீன்  தலைமையில், சாகிர் கரீமின் வழிநடத்தலில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக திகாமடுல்ல மாவட்ட பாராளமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதி அமைச்சருமான பைசால் காசிமும் கௌரவ அதிதியாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஆரீப் சம்சுதீன் மற்றும் விசேட அதிதிகளாக கல்முனை பிரதேச செயலக சமூகசேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் ரீ.அன்சார் சாய்ந்தமருது பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.எம்.அப்துல் மஜீத் போன்றோருடன் தேசமானிய ஏ.வி.எம் ஜௌபறும் கலந்து உரையாற்றினர்.

    இங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த பாராளமன்ற உறுப்பினர் பைசால் காசிம், மாற்றுத்திறனாளிகள் விடயத்தில் தனது சகோதரர் ஒருவரை மாற்றுத்திரனாளியாக கொண்டுள்ளதால், சிலவேளைகளில் அவர்கள் படும் வேதனைகளை கண்கூடாக காண்பதாகவும், நமது பிரதேசத்தில் வாழும் வசதி படைத்தோர் அவர்களுக்கு உதவ முன்வரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

    மாற்றுத்திரனாளிகளிடம் உடலியல் ரீதியாக ஒரு சில குறைகள் இருந்தபோதிலும் சாதாரண மனிதர்களை விட விசேட திறன்களை அவர்களிடம் தான் அவதானித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

    இந்த மாற்றுத்திரனாளிகளைக் கொண்ட அமைப்பினால் அவர்களது வாழ்க்கைத்தரத்தை உயர்த்த உதவி கோரப்பட்டுள்ளதாகவும் இவ்வமைப்புக்கு தன்னால் முடிந்த சகல உதவிகளையும் செய்வதாகவும் ஆரம்பகட்டமாக இவ்வமைப்பில் உள்ள 150 போரையும் மூன்று குழுக்களாக பிரித்து ஒவ்வொரு குழுவுக்கும் தனித்தனியாக ஏதாவது ஒரு தொழிலை ஆரம்பித்து அதனுடாக வருமானத்தை ஈட்டக்கூடியவாறான தொளிளைத்த்தொடங்க  தனது சொந்த நிதியில் இருந்து உதவ இருப்பதாகவும் தெரிவித்தார்.

    அடுத்த வருடத்துக்கான தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து இந்த அமைப்புக்கு இவ்வருடத்தில் தனது சொந்த நிதியில் உதவுவது போன்று தொழில்களை விரிவுபடுத்த  நிதி வழங்க உத்தேசித்திருப்பதாகவும் எதிர்வரும் வரவுசெலவுத்திட்ட, சமுக சேவை அமைச்சின் குழுநிலை விவாதத்தில் மாற்றுத்திரனாளிகளுக்கு வழங்கப்படும் நிதி உதவு தொகையை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதாகவும் தெரிவித்தார்.
    Displaying DSC_0871.JPGDisplaying DSC_0895.JPGDisplaying DSC_0901.JPGDisplaying DSC_0914.JPG

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மாற்றுத்திறனாளிகளும் எங்களது உடன்பிறந்தவர்களே பாராளமன்ற உறுப்பினர் பைசால் காசிம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top