பி.எம்.எம்.ஏ.காதர்: பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரிஸ் அவர்களின் 52 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் மருதமுனை அல்-ஹிக்மா கனிஷ்ட பாடசாலைக்கு மூன்று மாடி வகுப்பறைக் கட்டம் மற்றும் கழிப்பறைத் தொகுதிக்குமான அடிக்கல் நாட்டிய நிகழ்வு இன்று (14-10-2014) பாடசாலை அதிபர் எம்.எல்.எம்.மஹ்ரூப் தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் கலந்து கொண்டு கட்டத்திற்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார். விஷேட அதிதியாக கல்முனை வலயக்
கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல், அதிதிகளாக கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப், ஏ.எல்.எம்.முஸ்தபா, எம்.எஸ்.உமர் அலி மற்றும் காதி நீதிபதி என்.எம்.இஸ்மாயில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் நியாஸ் எம் அப்பாஸ் ஷம்ஸ் மத்திய கல்லூரி அதிபர் ஏ.ஆர்.எம்.தௌபீக் உள்ளீட்ட பாடசாலை அபிவிருத்திச் சபை உறுப்பினர்களும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment