முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் பிரதிநிதிகளுக்கும்,எதிர்கட்சிதலைவரின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பொன்று வெற்றிகரமாக முடிவடைந்துள்ள அதேவேளை இந்த சந்திப்பில் சோபித தேரரும்,சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் அதிருப்தியாளர்கள் குழுவொன்றும் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சந்திப்பில் பொதுவேட்பாளர் என்ற விடயத்திற்க்கு அப்பால் நல்லாட்சி நிலவுகின்ற ஜனநாய அரசொன்றை ஏற்படுத்தவேண்டியதன் தேவை குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் தெரிய வருகின்றது. இதற்காக பொதுவேலை திட்டமொன்றை உருவாக்க வேண்டும் என்பதில் கட்சிகளின் பிரதிநிதிகள் மத்தியில் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது.இது இவ்வாறிக்க ஐக்கிய தேசிய கட்சியின் பிரதிதலைவராக நியமிக்கப்பட்டுள்ள சஜித் பிரேமதாசா ஐக்கிய தேசிய கட்சி தேர்தல்களில் தனித்து போட்டியிடவேண்டுமெனவும், ரணில் விக்கிரமசிங்கவே வேட்பாளாராக போட்டியிட வேண்டுமென வலியுறுத்தி வுருவதாக தெரிவிக்கப்படுகின்றது, தலதா அத்துக்கொரளை, மத்துமபண்டார ஆகிய இரு உறுப்பினர்கள் அவரிற்க்கு ஆதரவளிக்கின்றனர்.
(GTN)
0 comments:
Post a Comment