• Latest News

    October 11, 2014

    இந்தியாவின் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதத்துடன் இலங்கை பொது பல சேனா தீவிரவாதம் இணைகிறது

    M.ஷாமில் முஹம்மட்: இந்தியாவின் கிறிஸ்தவ மற்றும்  முஸ்லிம் மத சிறுபான்மைக்கு எதிராக   மத,இன வெறியை தூண்டும்  இந்துத்துவ அமைப்பான ஆர்.எஸ்.எஸ் என அழைக்கப்படும் ‘ராஷ்டிரிய சுயம் சேவக் சங்’ என்ற  அமைப்புடன் இலங்கையில் கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மத சிறுபான்மைக்கு எதிராக இன, மத வாதத்தை தூண்டும் பெளத்த தீவிரவாத அமைப்பான பொது பல சேனா இணைத்து செயல்படுவதற்கான பேச்சில் ஈடுபட்டுவருவதாக அந்த அமைப்பு அறிவித்துள்ளது .

    பொது பல சேனா மற்றும் ஆர்.எஸ்.எஸ்அமைப்புக்களின் இடையில் உயர் மட்ட பேச்சு இடம்பெற்று வருவதாக பொது பல சேனாவின் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் அறிவித்துள்ளார் .  இன்று பொது பல சேனாவின் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் இந்த தகவலை வெளியிட்டதாக AFP செய்தி நிறுவம் தகவல் வெளியிட்டுள்ளது.

    அளுத்கம, தர்ஹா நகர் , பேருவளை முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைக்கு காரணம் என குற்றம்சாட்டப்படும்   தீவிரவாத சிங்கள பௌத்த  அமைப்பான  பொதுபல சேனாவுக்கும்   மியன்மாரின் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் முஸ்லிம் மத ,இன அழிப்புக்கு காரணமான   அமைப்பு என குற்றம் சாட்டப்படும்  969 அமைப்புக்கும் இடையிலான அண்மையில் உடன்படிக்கை ஒன்று  கைச்சாத்திட்டப் பட்டுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது .

    இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ் என்ற அமைப்பு முஸ்லிம்களுக்கு எதிராக இன, மதவாதத்தை தூண்டி திட்டமிட்ட முறையில் முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக இன,மத அழிப்பையும் பயங்கரவாதத்தையும் செயன்படுத்தி வரும் அமைப்பு என குற்றம் சாட்டப்படுவது சுட்டிக்காட்டத்தக்கது .

    ஆர்.எஸ்.எஸ் என்ற அமைப்பு இந்தியாவில் பல குண்டு தாக்குதல்களை தானே மேற்கொண்டு விட்டு அதை முஸ்லிம்களின் தலையில் போட்டு  முஸ்லிம்களுக்கு எதிராக இன அழிப்பை நிகழ்த்தி காட்டிய அமைப்பு என நிரூபிக்கப் பட்டுள்ளமையும் மேலும் சுட்டிக்காட்டத்தக்கது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இந்தியாவின் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதத்துடன் இலங்கை பொது பல சேனா தீவிரவாதம் இணைகிறது Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top