பொதுபல
சேனா அமைப்பின் பௌத்த தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அல்லது பாதுகாப்புச்
செயலாளர் கோதபாய ராஜபக்சவே என மாதுலுவே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் பொதுபல சேனா
அமைப்பினால் நடத்தப்பட்ட மாநாட்டுக்கு பூரண அரச அனுசரணை வழங்கப்பட்டது.
பொது வேட்பாளராக நான் போட்டியிட்டு
விடுவேன் என்ற அச்சத்தினால் பொதுபல சேனா சேறு பூசும் நடவடிக்கைகளை
ஆரம்பித்துள்ளது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைiயை ரத்து செய்யுமாறு
ஆளும் கூட்டணி கட்சிகளான இடதுசாரி கட்சிகள் எழுத்து மூலம் கோரிக்கை
விடுத்துள்ளன.
நேற்று முன்தினம் நாகவிஹாரையில் ஐக்கிய
பிக்குகள் முன்னணியுடன் சோபித தேரர் நடத்திய சந்திப்பின் போது இந்தக்
கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அதேவேளை பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர்
கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ள தகவலில் இன்று நாட்டில்
ஜனாதிபதித் தேர்தல் குறித்து பெரிய குழப்பங்கள் ஏற்பட்டுக்
கொண்டிருக்கின்றன. குறிப்பாக எதிர்க்கட்சிகள் தமது வேட்பாளர் யார் என்பது
குறித்தே இன்னும் முடிவு செய்யாமல் இருக்கின்றன.
ஐக்கியத் தேசியக் கட்சியை எடுத்துக்கொண்டால் அதன் தலைவர் ரணில் என்றும்
பிறகு சோபித தேரர் என்றும் மாறி மாறி ஜனாதிபதி வேட்பாளர்களை அறிவித்து
வருகின்றனர்.
எம்மைப் பொறுத்தவரை நாம் எந்தக் கட்சிக்கும் இதுவிடயத்தில் ஆதரவளிக்கப்
போவதில்லை என்பதில் தெளிவாக இருக்கிறோம். ஏனெனில், எமக்கு நாட்டில்
வாழுகின்ற சிங்கள – பெளத்த மக்களில் இருப்பே முக்கியமாகும். இவர்களைப்
பாதுகாத்து இவர்களுக்கான உரிமைகளை வென்றெடுப்பதே எமது ஒரே நோக்கமாகும்.
இதற்கெல்லாம் இணங்கக்கூடிய ஒருவர் ஜனாதிபதி வேட்பாளராக
நியமிக்கப்படுவாராயின் எமது ஆதரவை நிச்சயமாக அவருக்குத் தெரிவிப்போம்.
இதேநேரத்தில் ஐக்கியத் தேசியக் கட்சியும் வீதி சமிக்ஞை விளக்கைப்போல
வேட்பாளரை நொடிக்கு நொடி மாற்றிக் கொண்டிருக்காது மிக விரைவில் தங்கள்
தரப்பின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது குறித்து தெளிவாக அறிவித்தால்
எமது நிலைப்பாட்டையும் அவர்களுக்கு தெரியப்படுத்துவோம் என தெரிவித்துள்ளார்
.
0 comments:
Post a Comment