• Latest News

    October 15, 2014

    ஊவாவில் ஐ.தே.க இனது வளர்ச்சி மக்களுக்குக் கிடைத்த சாபமா..??

    துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக் -
    ஊவா மாகாண சபை தேர்தலைத் தொடர்ந்து மிக அண்மித்த காலப் பகுதியில் ஜனாதிபதித் தேர்தலை நடாத்துவதற்கு அரசு தயாராகி வருவதால் எதிர் வரும் ஜனாதிபதித் தேர்தலின் பல்வேறு விடயங்களை தீர்மானிக்கும் சக்தியாக  ஊவா மாகாண சபைத் தேர்தல் முடிவுகள் உருப்பெற்றுள்ளன.

    அந்த வகையில் யார் ஐ.தே.க இனது பொது பொது வேட்பாளர்?என்பதைத் தீர்மானிப்பதிலும் ஊவா மாகாண சபைத் தேர்தல் முடிவுகள் அதிகம் செல்வாக்குச் செலுத்துகின்றன.ஐ.தே.க ஆனது ஊவாவில் அபரிதமான வளர்ச்சியை காண்பித்ததால் பொது வேட்பாளாராக ஐ.தே.க இனது தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை களமிறக்குவதில் ஐ.தே.க அதிகம் நாட்டம் காட்டி வருகிறது.ஊவா தேர்தல் முடிவுகளை வைத்தே ஐ.தே.க வேட்பாளராக ரணில் விக்ரமசிங்கவை களமிறக்குவதா??இல்லையா?? எனத் தீர்மானிப்பதாக ஏலவே ஐ.தே.க முக்கியஸ்தர்கள் சிலர் கருத்து வெளியிட்டிருந்தனர்.
    ஜே.வி.பி இடம்  ரணிலை பொது வேட்பாளராக களமிறக்குவதற்கான உடன்பாட்டு கருத்துக்களை அவதானிக்க முடிய வில்லை.மாறாகஇஎதிர்க் கருத்துக்களையே அவதானிக்க முடிகிறது.ஊவா மாகாண சபைத் தேர்தலில் ஐ.தே.க வளர்ச்சியடைந்துள்ளதே தவிர வெற்றியடைய வில்லை என்பதை ஐ.தே.க நினைவிட்கொள்ளும் அதே வேளை புதிய தலைவர் தலைமையிலான  ஜே.வி.பி யும் அபரிதமான வளர்ச்சி கண்டு வருவதனை ஏற்றுக் கொள்ள வேண்டும்.எனவேஇஜனாதிபதித் தேர்தலில் அரசாங்க எதிரணிகள் வெற்றியைச் சுவைக்க ஜே.வி.பி இனது பங்களிப்பும் தவிர்க்க முடியாதது.

    தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனும்  ரணிலை ஆதரிக்க  முயாது எனக் கூறி வருகிறார்.ரணில் களமிறங்குமிடத்து  சில வேளை மு.கா வேட்பாளரை காட்டி அரசாங்கம் பக்கம் சாய  முயலலாம்.பலமான எதிர் கூட்டு அமையும் போதே அதனை ஆதரிப்பது பற்றி ஆராயலாம் என மு.கா கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.சிறு பான்மையினரின் வாக்குகளே இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதியை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் என பலரும் ஆரூடம் தெரிவித்து வருகின்ற போது சிறு பான்மையினரின் பெரும் பான்மை ஆதரவைக் கொண்டிருக்கும் இக் கட்சிகள் எதிர்ப்பது ஆரோக்கியமான ஒன்றல்ல.

    அண்மையில் லன்டனில் வைத்து ரணில் விக்கிரம சிங்கவை சந்தித்த முன்னாள் ஜனாதிபதியும்இஇந்நாள் அரசியலில் தற்போதைய ஜனாதிபதியை ஆட்சி பீடத்தை விட்டும் கீழ் இறக்க முயற்சித்து வருபவர்களில் ஒருவருமான சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரத்துங்க ரணிலை பொது வேட்பாளராக களமிறங்க வேண்டாம் என அறிவுரை கூறி இருந்ததாக தகவல் வெளியாகி இருந்தது.சரத் பொன்சேகாஇதான் பொது வேட்பாளராக களமிறங்குவதில் தான் அதிகம் அக்கரை காட்டி வருகிறார்.ரணிலை..??சோபித தேரரும் ரணிலை பொது வேட்பாளராக்க வேண்டாம் என சில நாட்கள் முன்பு கூறி இருந்தார்.எனினும்இதற்போது உடன்பாட்டுக் கருத்தை வெளியிட்டுள்ள போதும்  வேட்பாளர் விடயத்தில் ஜே.வி.பி யையும்  கருத்திற் கொள்ளுமாறு கூறி உள்ளார்.இவரின் இக் கருத்து ஜே.வி.பி உங்களை ஏற்காது என்பதை மறைமுகமாக சுட்டி நிற்கிறது.

    ஊவா மாகாண சபையில் ஐ.தே.க வளர்ச்சியுற்றமையும் அரசாங்க  எதிரணிகள் நன்கு பலம் பெற்று விளங்கியமையும் ஆட்சி மாற்றத்திற்கான நம்பிக்கையை மக்களிடையே வலுக்கச் செய்த போதும்இகூட்டுச் சேர்ந்து வழி வெட்டி வெற்றிக் கனியை சுவைக்க செய்ய வேண்டியவர்களே ரணில் விக்கிரம சிங்கவை நிராகரிக்கும் போது ரணிலை பொது வேட்பாளராக களமிறக்குவதில் ஐ.தே.க  விடாப் பிடியாக இருப்பது பொது வேட்பாளர் மூலம் வெற்றிக்  கனியை சுவைப்பதற்கான சாதகத் தன்மைகளை இல்லாது செய்து விடும்.

    அரசியல் பிரவேசம் இன்றி இருந்த சரத் பொன்சேகா இற்கு வலிந்து அரசியல் முகவரி கொடுத்தது போன்ற ஒரு தவறை ஐ.தே.க மேலும் ஒரு முறை செய்ய விளையாது.அதே போன்று இம்முறை ஐ.தே.க இனது தலைவரைத் தவிர்த்து வேறு ஐ.தே.க யைச் சேர்ந்த ஒருவரை பொது வேட்பாளராக  களமிறக்குவதனை பலரும் ஏற்றுக்கொண்டுள்ளது போன்ற கருத்துக்களை வெளியிட்டு வருகின்ற போதிலும் ஐ.தே.க உறுப்பினர்கள் பலர் தனது கட்சியினுள் இன்னுமொரு ஹீரோவை உருவாக்கி விடாது தடுப்பதற்காக ஐ.தே.க இனது தலைவரை கை காட்டி நிற்கின்றார்கள்.

    ஊவா மாகாணத்தில் ஐ.தே.க இனது வளர்ச்சிக்கு பங்காற்றியவர்களில்  மிக முக்கியமானவர்களில் ஒருவரான  ஹரின் பெர்னாண்டோ தற்போதைய உண்மை நிலையையும்இதேவையையும்  அறிந்து சஜித் பிரேமதாசாவை களமிறக்குமாறு கருத்து தெரிவித்துள்ளார் என்பதும் இங்கே கவனத்திற் கொள்ள வேண்டிய மேலு மொரு விடயமாகும்.

    ஊவா மாகாண சபைத் தேர்தல் முடிவுகள் ரணிலை பொது வேட்பாளராக்குவதற்கான கருத்தை வலுக்கச் செய்திருப்பது ஊவா மாகாண சபையில் ஐ.தே .க இனது வளர்ச்சி மக்களுக்குக் கிடைத்த சாபமா?என்றே நினைக்கத் தோன்றுகிறது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஊவாவில் ஐ.தே.க இனது வளர்ச்சி மக்களுக்குக் கிடைத்த சாபமா..?? Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top