எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது பற்றி முஸ்லிம்
காங்கிரஸ் எந்தவொரு தீர்மானத்தையும் இதுவரை எடுக்கவில்லை. சில ஊடகங்களே
குற்றவாளிக்கூண்டில் முஸ்லிம் காங்கிரஸை நிறுத்துவதற்கு முனைந்துள்ளன என
முஸ்லிம் காங்கிரஸின் சிரேஷ்ட பிரதித்தலைவரும் கல்முனை மாநகர சபை
உறுப்பினருமான ஏ.எல். அப்துல் மஜீத் உறுதிப்படக்கூறினார்.
எதிர்வரும் நவம்பர் 19ம் திகதிக்குப் பின்னர் ஜனாதிபதித் தேர்தல் திகதி எந்நேரமும் அறிவிக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.
ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்படுமாயின் முஸ்லிம் காங்கிரஸ் யாரை
ஆதரிப்பது என்பதையிட்டு தீர்மானம் எடுக்கக்கூடிய பலமும் சக்தியும் கொண்ட
கட்சியாகவே திகழ்ந்து வருகின்றது.
எனினும் இன்றுவரை ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் யாரை
ஆதரிப்பது என்பது பற்றி எந்தவொரு தீர்மானமும் எடுக்காத நிலையில் சில
பத்திரிகைகளும் சில இணையங்களும் தமது அஜந்தாக்களுக்கேற்ப உண்மைக்குப்
புறம்பாக இதுபற்றி செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
சில வார வெளியீடுகளின் பத்தி எழுத்தாளர்கள் மனம்போன போக்கில் இந்த
விடயத்தில் தமது அபிலாஷைகளுக்கேற்ப கட்டுரைகளை வெளியிட்டு முஸ்லிம்
காங்கிரஸை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த முனைந்துள்ளனர்
0 comments:
Post a Comment