• Latest News

    October 12, 2014

    'சிரேஷ்ட பிரஜைகள் கௌரவிப்பும், கலாச்சார நிகழ்வுகளும்';

    பி.எம்.எம்.ஏ.காதர்: சர்வதேச சிரேஷ்ட பிரஜைகள் வாரத்தையொட்டி கிழக்கு மாகாண சுகாதார சமூக சேவைகள் அமைச்சின் கீழ் உள்ள கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட அலுவலகம் ஏற்பாடு செய்திருந்த மூன்று இனங்களையும் ஒன்றிணைத்த இனநல்லுறவுக்கான 'சிரேஷ்ட பிரஜைகள் கௌரவிப்பும், கலாச்சார நிகழ்வுகளும்'; இன்று (11-10-2014) காலை 9.00 மணி தொடக்கம் பி.ப. 3.00 மணிவரை மருதமுனையில் அமைந்துள்ள கல்முனை பிரதேச செயலக கலாச்சார மத்திய நிலையத்தில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.

    அம்பாறை மாவட்ட சமூக சேவைகள் திணைக்கள மாவட்ட உத்தியோகத்தர் எம்.பி.சம்சுதீன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார சமூக சேவைகள் அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் கலந்து கொண்டார்;.

    கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எம்.ஜெமீல், ஏ.எல்.தவம், ஏ.எல்.எம்.நஸீர் ஆகியோரும், விஷேட அதிதிகளாக கிழக்கு மாகாண சுகாதார சமூக சேவைகள் அமைச்சின் செயலாளர் கே.கருனாகரன்,  கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார், அம்பாறை மாவட்ட மேலதிக மாவட்ட செயலாளர் கே.விமலநாதன், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், பொத்துவில்  பிரதேச செயலாளர் என்.என்.எம்.முஸ்ஸர்ரட் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    மேலும் அம்பாறை மாவட்டத்தில் உள்ள இருபது பிரதேச செயலகப் பிரிவுகளில் இருந்து இருநூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லீம், தமிழ், சிங்கள்; சிரேஷ்ட பிரஜைகள் கலந்து கொண்டனர்.

    நிகழ்வில் கலந்து கொண்ட முஸ்லீம், தமிழ், சிங்கள்; சிரேஷ்ட பிரஜைகளின் நடனம், நாடகம், பாட்டு, கவிதை, மற்றும் பாடசாலை மாணவர்களின் நடன நிகழ்சிகளும் அரங்கேற்றப்பட்டன.

    இருபது பிதேச செயலகப் பிரிவுகளில் இருந்தும் இருபது சிரேஷ்ட பிரஜைகள் தெரிவு செய்யப்பட்டு பிரதமஅதிதி, கௌரவ, விசேஷட, அதிதிகளால்;   நினைவுச் சின்னம், சான்றிதழ் மற்றும் பரிசுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர் மேலும் அம்பாறை மாவட்டதில் சிறப்பாக இயங்கும் இருபது சிரேஷ்ட பிரஜைகள் சங்கத்திற்கும் நினைவுச் சின்னங்கள் வழங்கப்;பட்டன

    நிகழ்வில் கலந்து கொண்ட  அனைத்து சிரேஷ்ட பிரஜைகளுக்கும் பரிசுகளும்; சிற்றூண்;டி மற்றும் மதிய போசனமும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்திலேயே முதல் முறையாக இந்த நிகழ்வு நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

    ஏ.எல்.எம்.சினாஸ் தமிழிலும், யூ.எல்.எம்.பைசர் சிங்களத்திலும் நிகழ்சிகளைத்  தொகுத்து வழங்கினார்கள்.  மாவட்ட சமூக சேவைகள் திணைக்கள உத்தியோகத்தர்களும, அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டு நிகழ்வுக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.  










    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: 'சிரேஷ்ட பிரஜைகள் கௌரவிப்பும், கலாச்சார நிகழ்வுகளும்'; Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top