M.ரிஸ்னி முஹம்மட்: சட்டம் , ஒழுங்கை நிலைநிறுத்துவதிலும், இனவாத பிளவை ஏற்படுத்தும் எந்த தனிநபர் அல்லது குழுவை நீதியின் முன் கொண்டுவருவதிலும் அரசாங்கம் உறுதியாக உள்ளது .நான்கு மத வழிபாட்டு தலங்களையும் இலக்கு வைத்து ஆங்காங்கே சம்பவங்கள் நடந்துள்ளது,அரசாங்கம் அதற்கு உடனடியாக கண்டனம் தெரிவித்து மற்றும் நடவடிக்கை எடுத்து வருகிறது என இலங்கை அரசாங்கம் ஐநா வில் அறிக்கை சமர்பித்துள்ளது .
ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க இந்த அறிக்கையை நேற்று சமர்ப்பித்துள்ளார் , அவர் சமர்பித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது ,
பல இன மத மக்களை கொண்ட அணைத்து நாடுகளிலும் நிகழ்வதை போன்று துரதிருஷ்டவசமான தனிமைப்படுத்தப்பட்ட சம்பவங்கள் நிகழ முடியும் அதேபோன்று இலங்கையில் நான்கு மத வழிபாட்டு தலங்களையும் இலக்கு வைத்து ஆங்காங்கே சம்பவங்கள் நடந்துள்ளது, அரசாங்கம் அதற்கு உடனடியாக கண்டனம் தெரிவித்து மற்றும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
அளுத்கம , பேருவளை சம்பவம் தொடர்பில் 148 பேர் (116 சிங்களவர்கள் மற்றும் 32 முஸ்லிம்கள்) இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். மூன்று பேர் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மூன்று பேருக்கு போலீஸ் பிணை வழங்கப்பட்டது மற்றும் 142 பேருக்கு நீதிமன்ற பிணை வழங்கப்பட்டது, இதற்கு மேலதிகமாக 461 முறைப்பாடுகளின் அடிப்படையில் , நீதிமன்றத்துக்கு போலீஸ் தகவல்களை வழங்கியுள்ளது.
இலங்கை பொலிஸ் குற்ற விசாரணை திணைக்களம் (CID) சம்பவம் தொடர்பாக ஒரு ஒட்டுமொத்த விசாரணை நடத்த பணிக்கப்பட்டுள்ளது.வெறுப்பு பிரசாரத்தின் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படும் 8 பெளத்த பிக்குகள் அடங்கலாக சந்தேக நபர்களிடம் பொலிஸ் குற்ற விசாரணை திணைக்களம் விசாரணை நடாத்தியுள்ளது . விசாரணை முடிவுற்றதும் அறிக்கை சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக அவரிடம் கையளிக்கப்படும்.
சேதமான சொத்துக்களை திருத்தல் மற்றும் மீள்கட்டுமானம் செய்தல் ஆகிய பணியை துரிதப்படுத்த ஜனதிபதி பாதுகாப்பு படையினரை அதில் ஈடுபடுமாறு பணித்துள்ளார், இதுவரை 55 வீடுகளும் , 13 வணிக கட்டிடங்கள் ஆகியவற்றின் கட்டுமான பணி நிறைவு அடைத்துள்ளது, 114 வீடுகள் மற்றும் 34 வணிக கட்டிடங்கள் ஆகியவற்றின் மீதான வேலை இடம்பெற்று வருகிறது .
இந்த
சம்பவத்துக்கு பிறகு மதங்களுக்கு இடையிலான சமாதானத்தை ஊக்கிவிக்கவும் ,
சமூகங்களுக்கு இடையில் புரிந்துணர்வை ஏற்படுத்தவும் அரசாங்கம் ஆக்கபூர்வமான
நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது எனவும் ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க நேற்று சமர்ப்பித்துள்ள அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது
ஐ.நா அறிக்கை இலங்கை நிலவரம் தொடர்பிலான அறிக்கை ஒன்றை ஐ நா மனித உரிமைகள் ஆணையர், இளவரசர் செயித் அல் ஹூசைன் கடந்த மாதம் சமர்பித்திருந்தார்
. அதில் இலங்கையின் மனித உரிமை சூழல் குறித்து விரிவாக
அலசப்பட்டிருந்ததுமுஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ சிறுபான்மை அமைப்புக்களுக்கு
எதிராக இந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் மட்டும் 88 தாக்குதல்கள்
நடந்துள்ளது என்று குறிபிட்ட அந்த அறிக்கை இந்த வன்முறைகளில்
ஈடுபட்டவர்கள் யாரும் இதுவரை சட்டரீதியாக தண்டிக்கப்படவில்லை என்பதையும்
சுட்டிக் காட்டியிருந்தது . அதற்கு பதிலளிக்கும் முகமாகவே நேற்று இலங்கை அரசாங்கம் இந்த அறிக்கையை சம்பர்பித்துள்ளது .
0 comments:
Post a Comment