• Latest News

    November 08, 2014

    நிலம் தாழ்ந்து காணப்படுகி​ன்றது - 201 போ் இடம்பெயா்வு

    அம்பகமுவ, மஸ்கெலியா மவுஸ்ஸாக்கலை நீர்தேக்கத்திற்கு அண்மையில் உள்ள காட்மோர் தோட்டம் போக்மோர் பிரிவு பகுதியில்  உள்ள மலையின் நிலம் தாழ்ந்து காணப்படுவதன் காரணமாகவும் சில இடங்களில் பாரிய வெடிப்பு ஏற்பட்டுள்ளதன் காரணமாகவும் மண்சரிவு அபாயம் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

    இதன்காரணமாக 47 குடும்பத்தினர் இடம்பெயர்ந்து காட்மோர் தமிழ் வித்தியாலயத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    47 குடும்பங்களை சேர்ந்த 201 பேர் இவ்வாறு இடம்பெயர்ந்துள்ளனர்.

    இதனை நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.இராஜதுரை சம்பவ இடத்திற்கு விஜயம் செய்து நிலைமையை ஆராய்ந்தார்.

    அதன் போது நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.இராஜதுரை தோட்டத்தில் உள்ள லயக் குடியிருப்புகள், மலையின் நிலம் தாழ்ந்து காணப்பட்டமையும் சில இடங்களில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதையும் அவதானித்துள்ளதோடு மக்களிடம் கலந்துரையாடியுள்ளார்.

    இந்த மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ள இடத்திற்கு விஜயம் செய்த கட்டிட ஆய்வு பிரிவினர் பரிசோதனைகள் செய்த பின் மேற்படி இடம் மண்சரிவு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.



    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நிலம் தாழ்ந்து காணப்படுகி​ன்றது - 201 போ் இடம்பெயா்வு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top