• Latest News

    November 05, 2014

    ரணில்தான் ஐ.தே.க.வின் வேட்பாளர் என்பது இறுதி முடிவல்ல: கபீர் ஹாசிம்

    ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் ரணில் விக்கிரமசிங்கவே ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவார் என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.

    ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக பீ.பீ.சி. சர்வதேச செய்திச் சேவைக்கு வழங்கியுள்ள பேட்டியிலேயே ஐ.தே.க. வின் தவிசாளர் கபீர் ஹாசிம் இதனைத் தெரிவித்துள்ளார்.

    தற்போதைய நிலையில் கட்சியின் வேட்பாளர்களாக துணைத் தலைவர் சஜித் பிரேமதாச, தலைமைத்துவக்குழுத் தலைவர் கரு ஜயசூரிய ஆகியோரின் பெயர்களும் பரிசீலனையில் உள்ளது. எனினும் கட்சியின் செயற்குழு இது தொடர்பில் எதுவித முடிவும் எடுக்கவில்லை.

    அனைத்து தரப்பினரும் ஏற்றுக் கொள்ளும் வகையிலான ஒரு வேட்பாளரையே ஐக்கிய தேசியக் கட்சி களத்தில் இறக்கும். அதன் மூலம் இந்த அரசாங்கத்தின் அதிகார ஆட்டம் முடிவுக்குக் கொண்டு வரப்படும் என்றும் கபீர் ஹாசிம் மேலும் தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையே மங்கள சமரவீர அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளப் போவதாக வெளிவந்துள்ள தகவல்கள் தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த அவர், அவ்வாறான ஒரு தகவல் பரவியிருப்பது உண்மைதான் என்று ஏற்றுக் கொண்டார். எனினும் மிகத்திறமையான அரசியல்வாதியான மங்கள, கட்சியை விட்டு விலகாமல் பாதுகாத்துக் கொள்வது கட்சித் தலைவரின் பொறுப்பு என்றும் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ரணில்தான் ஐ.தே.க.வின் வேட்பாளர் என்பது இறுதி முடிவல்ல: கபீர் ஹாசிம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top