• Latest News

    November 05, 2014

    இன அடிப்படையில் நிர்வாக மாவட்டங்களை பிரித்து எடுப்பதை அரசாங்கம் நிராரித்தது

    இன அடிப்படையில் நிர்வாக மாவட்டங்களை பிரித்து எடுப்பதை அரசாங்கம் நேற்று நாடாளுமன்றத்தில் நிராரித்தது. இதனை பிரதமர் தி.மு.ஜயரத்ன வரவு-செலவு திட்ட குழு நிலை விவாதத்தின்போது தெளிவாக கூறினார்.

    திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாகவுள்ள தொகுதிகளை சேர்த்து  தனியான நிர்வாக மாவட்டம் உருவாக்கப்பட வேண்டுமென ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கேட்டுள்ளதை ஐ.தே.க எம்.பி விஜயதாஸ ராஜபக்ஷ விவாதித்த போது பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

    முஸ்லிம் காங்கிரஸ் தனது கோரிக்கையை மீண்டும் முன்வைக்கின்றது என்ற தலைப்பில் டெய்லி மிரரில் வெளியிடப்பட்ட செய்தியை தொடர்பு படுத்தி பேசிய விஜயதாஸ எம்.பி, இன அடிப்படையில் மாவட்டங்களை உருவாக்கும்படி கேட்டது எந்தவொரு கட்சிக்கும் பொருத்தமல்ல.
    இது முஸ்லிம் இளைஞர்கள் மத்தியில்  பிரிவினை எண்ணத்தை தூண்டிவிடும். இது நாட்டைப்பிரிக்கும் முயற்சிக்கும் வழிவகுக்கலாம் என அவர் கூறினார்.

    ஒரு காலத்தில் தமிழ்த் தலைவர்களான அமிர்தலிங்கம் மற்றும் யோகேஸ்வரன் ஆகியோர் இவ்வாறான எண்ணங்களை கொண்;டிருந்தனர். இது வே.பிரபாகரனின் தனி நாட்டுக்கான ஆயுதப்போராட்டத்தில் முடிந்தது.

    தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் வடக்கு- கிழக்குக்கு வெளியே பெரும்பான்மை மக்களுடன் சமாதானமாக ஒற்றுமையாக வாழ்கின்றனர்.
    வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களை விட கூடுதலான தமிழ், முஸ்லிம் மக்கள் தெற்கில் வாழ்கின்றனர்.

    எனவே, இன அடிப்படையிலான மாவட்ட கோரிக்கை வலுவற்றது. மறைந்த அமைச்சர் ஏ.எச்.எம். அஷ்ரப்பிடம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை தோற்றுவிக்கும் படி முதலில் ஆலோசனையை வழங்கியவர் தான் என பிரதமர் ஜயரத்ன கூறினார்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இன அடிப்படையில் நிர்வாக மாவட்டங்களை பிரித்து எடுப்பதை அரசாங்கம் நிராரித்தது Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top