இலங்கை அரச பல்கலைக்கழகங்களில் வெளிவாரி பட்டங்கள் என்ற வகையில் பட்டங்களை விற்பனை செய்வதாக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது.பாடசாலைக்கல்வி முறையிலும் பெற்றோரிடமும் மாணவர்களிடமும் பணம் அறவிடப்படுவதாக அந்த ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் நஜித் இந்திக்க இது தொடர்பில் கருத்துரைக்கையில்,
றுகுணு பல்கலைக்கழகத்தில் பட்டங்கங்கள் 67ஆயிரம் ரூபாவுக் விற்பனை செய்யப்பட்டுள்ளன .
முகாமைத்துவ பட்டங்கள் 3லட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன.
ரஜரட்டையில் முகாமைத்துவ பட்டம் 150000 ரூபாவுக்கு,இசை நடன பட்டம் 81ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகின்றன.
களனியில் பட்டங்கள் 75ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணத்தில் பட்டங்கள் 5லட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றன.
பேராதெனியவில் பட்டங்கள் 3லட்சத்துக்கு விற்பனை செய்யயப்படுகின்றன என்றும் ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.
0 comments:
Post a Comment