• Latest News

    November 07, 2014

    அ.இ.ம.கா. கிளை பிரான்சில் உதயம்

    ஏ.எச்.எம் பூமுதீன்: அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் - சர்வதேச ரீதியாக கிளைகளை அங்குரார்ப்பணம் செய்யும் வேலைத்திட்டத்தில் 02ம் கட்ட நிகழ்வு நேற்று முன்தினம் 06ம் திகதி பிரான்ஸில் இடம்பெற்றது.

    ஐரோப்பிய நாடொன்றான பிரான்ஸில் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்ட முதலாவது அ.இ.ம.கா கட்சியின் கிளை இதுவாகும்.

    இலங்கையின் தேசிய முதுபெரும் கட்சிகளான சு.கட்சி. மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பனவற்றுக்கு அடுத்ததாக ஐரோப்பிய நாடான பிரான்ஸி;ல் கட்சிக் கிளை ஒன்றை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் பெருமையை இதன் மூலம் அ.இ.ம.கா பெற்றுள்ளது.

    பிரான்ஸில் இடம்பெற்ற இந்த சரித்திர முக்கியத்துவம் பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசியத் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன் கலந்து கொண்டார்.

    அ.இ.ம.கா வின் பிரான்ஸ் கிளை இணைப்பாளரான இஸ்ஸத் ரஹ்மான் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் , இலங்கையின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பிரான்ஸ் நாட்டில் தொழில் புரியும் பலர் கலந்து கொண்டு கட்சியின் உறுப்புருமையை தேசியத் தலைவர் அமைச்சர் ரிசாத் பதியுதீனிடம் இருந்து பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

    ஐரோப்பிய நாடுகளில் மேலும் கட்சியின் கிளைகளை அங்குரார்ப்ணம் செய்து வைப்பதற்கு தமது முழு ஆதரவினை வழங்குவதாகவும் கடந்த காலங்களில் இலங்கையில் முஸ்லிம் சமுகத்திற்காக அமைச்சர் ரிசாத் பதியுதீன் ஆற்றியஅளப்பரிய பங்களிப்புகளுக்கும் இந்நிகழ்வில் கலந்து கொண்ட பிரான்ஸ் கிளை உறுப்பினர்கள் தமது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கெண்டனர்.


    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அ.இ.ம.கா. கிளை பிரான்சில் உதயம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top